நீட் தீர்ப்பு-முதலமைச்சர் வரவேற்பு
பதிவு : ஜூலை 13, 2021, 11:50 PM
நீட் ஆய்வு குழுவிற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 'நீட் தேர்வு விலக்கு சட்டரீதியாக இருந்தால் பா.ஜ.க ஏற்கும்' என சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் தெரிவித்த நிலையில், ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வழக்கு தொடர்ந்த‌து அப்பட்டமான இரட்டை வேடம் என விமர்சித்து உள்ளார்.பா.ஜ.க.வின் முயற்சியை கண்டிக்காமல், வேடிக்கை பார்த்தது ஏன்? என எடப்பாடி பழனிசாமியால் விளக்க முடியுமா? எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கான தொடக்கப் புள்ளி இந்த தீர்ப்பு என குறிப்பிட்டு உள்ள முதலமைச்சர்.முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழக அரசுக்கு இந்த தீர்ப்பு அளித்து உள்ளதாக தெரிவித்து உள்ளார்.மேலும், ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு அடுத்தடுத்து மேற்கொள்ளும் என்றும்,ஆனால் அதற்குள் இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடி மிகுந்த சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது வருந்த‌தக்கது என்றும்,  ஆனாலும், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம் என ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

35 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

16 views

பிற செய்திகள்

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு - பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

1 views

அமைச்சர் அன்பில் மகேஷ் உடற்பயிற்சி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கொண்ட உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

38 views

அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனு - விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

42 views

ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு "புதிய ரயில் திட்டம் வேண்டும்" - மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்

ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புதிய ரயில்வே திட்டம் கொண்டு வர வேண்டும் என்று, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

49 views

7 கோடி பாலோவர்ஸ்... உலக அளவில் பிரதமர் மோடி முதலிடம்!

பிரதமர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் அரசியலில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தலைவர்களில் அதிகமான பின்தொடர்வோருடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

13 views

ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வு? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.