தடுப்பூசி செலுத்துதலில் சரிவு - கோவின் இணையதளத்தில் தகவல்
பதிவு : ஜூலை 13, 2021, 07:02 PM
நாடு முழுவதும் கடந்த ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து தினந்தோறும் சராசரியாக போடப்படும் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் தொடர் சரிவு ஏற்பட்டு இருப்பது அரசு தரவில் தெரியவந்துள்ளது.
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த ஜூன் 21 ஆம் தேதி அறிவித்த மத்திய அரசு,தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கி வருகிறது. 
இந்நிலையில் 21 ஆம் தேதிக்கு பின்னர் தினந்தோறும் போடப்பட்டு வரும் தடுப்பூசி டோஸ்களின் சராசரி எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதை அரசின் கோவின் இணையதள தரவுகள் உறுதிபடுத்தியிருக்கிறது.கடந்த ஜூன் 21 முதல் 27 வரை, சராசரியாக 61 லட்சத்து 14  ஆயிரம் டோஸ்கள் தினசரி போடப்பட்டிருக்கின்றன. ஆனால் இதற்கு அடுத்த வாரமான ஜூன் 28 முதல் ஜூலை 4 வரையில்,  சராசரி எண்ணிக்கை 41 லட்சத்து 92 ஆயிரமாக குறைந்திருக்கிறது.இதுவே ஜூலை 5 முதல் 11 வரையிலான 3-வது வாரத்தில்  34 லட்சத்து 32 ஆயிரமாக சரிந்துள்ளது.ஜூன் 14 முதல் 20 வரையிலான வாரத்தில் தடுப்பூசி செலுத்தும் சராசரி,33.97 லட்சம் டோஸ்களாக இருந்துள்ளது.  மாநிலங்களை பொறுத்தவரை கலவையான போக்கு தெரிகிறது. சமீப நாட்களில் தொற்று அதிகரித்துவரும் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் தினசரி சராசரி தடுப்பூசி செலுத்துவதில் வீழ்ச்சி காணப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை, 38 கோடியே 11 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

246 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

20 views

"மழை நீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்தும் வகையில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

15 views

"புதிய மாநகராட்சி, நகராட்சி விரைவில் அறிவிப்பு" - அமைச்சர் கே.என்.நேரு

புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்பட்டதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

34 views

"சென்னை, கரூரில் சொந்த வீடு இல்லை" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்....

30 views

மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

50 views

90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ் - யார் இந்த டான்சிங் ரோஸ்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

608 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.