ரஜினி மக்கள் மன்றம் திடீர் கலைப்பு - எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்த ரஜினி
பதிவு : ஜூலை 13, 2021, 07:40 AM
எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அரசியல் தொடர்பான அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரா ரஜினி?
எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்ற
அறிவிப்பை வெளியிட்டு, அரசியல் தொடர்பான அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரா ரஜினி? விளக்குகிறது, இந்த தொகுப்பு...உடல் நலக்குறைவால் அரசியலுக்கு வரப் போவதில்லை என
அறிவித்த ரஜினிகாந்த், அண்ணாத்த படப்பிடிப்புகளை முடித்துவிட்டு, கடந்த மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சமீபத்தில் சென்னை திரும்பினார்.இந்த நிலையில் மக்கள் மன்ற மாவட்ட
செயலாளர்களுடன் ரஜினி திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது மீண்டும் பரபரப்பை பற்றவைத்தது.போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்த்,ரஜினி மக்கள் மன்றத்தை தொடரலாமா? எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடலாமா? என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என கூறிவிட்டுச் சென்றார்.காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்த ரஜினி 30க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக்கு பின் ரஜினி வெளியிட்ட அறிக்கையில், கால சூழலால் நினைத்தது சாத்தியப்படவில்லை. வரும் காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் தனக்கு இல்லை என்பதால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும்,
அது ரசிகர் நற்பணி மன்றமாக மட்டும் செயல்படும் என்றும் அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

22 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

12 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

16 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

21 views

நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.