அமெரிக்க ராணுவம் வெளியேற்றம்; ஆப்கானிஸ்தானில் சீன ஆதிக்கம் - உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு
பதிவு : ஜூலை 11, 2021, 03:47 PM
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறி வரும் நிலையில், சீனாவின் ஆதிக்கம் அங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறி வரும் நிலையில், சீனாவின் ஆதிக்கம் அங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு காரணமான அல் கொய்தா இயக்கத்தினர் மற்றும் அவர்களுக்கு புகலிடம் அளித்த தாலிபான்களை அழிக்க, 2001ஆம் ஆண்டில் அமெரிக்கா படை எடுத்தது.

20 ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறி வரும் நிலையில், அங்கு தாலிபான்கள் ஆதிக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

ஆப்கானிஸ்தான், அமெரிக்க படைகள், தாலிபான்கள், சீனா, துறைமுகம், சாலைகள்,  

ஆப்கானிஸ்தானில் இருந்த 210 சீன குடிமக்களை சீனாவிற்கு அழைத்து வர, கடந்த வாரம் ஒரு பயணிகள் விமானத்தை அனுப்பியிருந்தாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, சீனாவின் அகலப்பட்டை மற்றும் சாலை திட்டத்தை, ஆப்கானிஸ்தானிற்கு விரிவுபடுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்களை சீன முதலீடுகளைக் கொண்டு உருவாக்கி, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 

4.63 லட்சம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வரும் பொருளாதார திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கு விரிவுபடுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை, பாகிஸ்தானின் பேஸ்வார் மாகாணத்துடன் இணைக்க ஒரு நெடுஞ்சாலை ஒன்றை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க ராணுவம் வெளியேறியதால் உருவாகியுள்ள வெற்றிடத்தை சீனா நிரப்ப முயற்சி செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

112 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

83 views

பிற செய்திகள்

பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள் - காரணத்தை ஆராய்ந்து வரும் அதிகாரிகள்

அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் இருக்கும் இரண்டு ஏரிகள் பிங்க் நிறத்திற்கு மாறியது.

31 views

கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை - தகிக்கும் ஏதென்ஸ் நகரம்

கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையில் ஏதென்ஸ் மக்கள் தகித்து வருகின்றனர்.

70 views

தீவிரமாகப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

10 views

அஸ்ட்ரா ஜெனிகா விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு - மொத்தம் ரூ. 8,900 கோடிக்கு தடுப்பூசி விற்பனை

அஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி விற்பனை 2 ஆம் காலாண்டில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

60 views

வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள்

பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன.

33 views

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் ரோவர் - கடுமையான நிலப்பரப்பினை கடக்கும் ரோவர்

சீனாவின் ஸுராங்க் என்றழைக்கப்படும் ரோவர் ஊர்தி, செவ்வாய் கிரகத்தின் கடுமையான நிலப்பரப்பினை கடந்து செல்ல தொடங்கியுள்ளது.

93 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.