உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் - பத்திரிகையாளரை தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி
பதிவு : ஜூலை 11, 2021, 01:13 PM
உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. நூற்றுக் கணக்கான பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலின்போது, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கட்சித் தொண்டர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, 600-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். ஆனால், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்று உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளன. அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில், தேர்தலின்போது, பத்திரிகையாளரை ஐஏஎஸ் அதிகாரி கடுமையாக தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உன்னோவ் மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக உள்ள திவ்யன்ஷு பட்டேல், தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. இதனை, பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்த நிலையில், ஆத்திரமடைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்திரிகையாளரை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிபதி உறுதி அளித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

பிற செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் - பெகாசஸ் உருவாக்கிய NSO நிறுவனம் மீது விசாரணை

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உலகம் முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை உருவாக்கிய NSO நிறுவனத்தின் சேவையை சில நாடுகள் ரத்து செய்துள்ளன.

4 views

உடைந்து விழுந்த மேல்தேக்க குடிநீர் தொட்டி - பாய்ந்தோடிய தண்ணீர்

குஜராத் மாநிலம் ஜூனாகாத் பகுதியில் உள்ள கிர்ஷாரா கிராமத்தில் 40 ஆண்டு பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது.

13 views

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு

கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

103 views

மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் - காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர​ம்

கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்....

221 views

காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம் - ஏணி மூலம் ஆற்றை கடந்த அமைச்சர்

இமாச்சல பிரதேச அமைச்சர் ஒருவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றார்.

13 views

ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம் - ஸ்டெர்லைட் ஆலை நடவடிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிவடைந்ததையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை தொழிற்சாலை நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.