பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா - சிவப்பு கம்பளத்தில் திரை நட்சத்திரங்கள்
பதிவு : ஜூலை 10, 2021, 07:29 PM
பிரான்ஸ் நாட்டில் 74ஆவது கேன்ஸ் திரைப்படவிழா ஜூலை 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த திரைப்பட விழாவின் வரலாறு பற்றி பார்க்கலாம்.
பிரான்ஸ் நாட்டில் 74ஆவது கேன்ஸ் திரைப்படவிழா ஜூலை 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த திரைப்பட விழாவின் வரலாறு பற்றி பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை நகரமான கேன்ஸில் 1946இல் ஒரு சர்வதேச திரைப்பட விழா சிறிய அளவில் தொடங்கப்பட்டது.

இத்தாலியில் ஆண்டு தோறும் நடைபெறும் புகழ்பெற்ற வெனிஸ் திரைப்பட விழாவிற்கு போட்டியாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உதவியோடு பிரான்ஸ் இதைத் தொடங்கியது.

கேன்ஸ் திரைபட விழா, பிரான்ஸ், திரைபட நட்சத்திரங்கள், சிவப்பு கம்பளம், திரைபடங்கள்

இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, படங்களை பார்க்க பொது மக்களுக்கு அனுமதி 
அளிக்கப்படுவதில்லை.  திரைப்படத் துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டும், அழைப்பிதழ்களின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது.

பல்வேறு உலக நாடுகளில் இருந்து பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் கேன்ஸ் திரைபட விழாவில் கலந்து கொள்கின்றனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு 
பரிசளிக்கப்படுகிறது

முழு நீளத் திரைப்படங்கள், குறும்படங்கள், பழைய கிளாசிக் படங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரிவுகளில் திரைபடங்கள் திரையிடப்படுகின்றன.

பால்மெ டி ஆர்  (Palme d'Or) என்ற பரிசு, மிகச் சிறந்த திரைப்படத்திற்காக 1955 முதல் ஆண்டு தோறும் அளிக்கப்பட்டு வருகிறது.

திரைப்பட விழா அரங்கின் நுழைவாயில் அருகே சிவப்பு கம்பளம் ஒன்று ஆண்டு தோறும் விரிக்கப்பட்டு, அதில் புகழ் பெற்ற திரைப்பட நட்சத்திரங்கள் பல விதமான ஆடைகளை அணிந்து, ஒய்யாரமாக நடந்து செல்லும் போது, சர்வதேச ஊடகங்கள் அவர்களை படம் பிடிப்பது வழக்கம்.

இந்தியாவில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து 20 ஆண்டுகள் இந்த சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

16 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

ஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.

14 views

அமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.

9 views

சீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...

சீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.

13 views

கொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை

கொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.

8 views

சர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.