கோட்டக்கல் ஆரிய வைத்யசாலை நிர்வாக அறங்காவலர் வாரியர் காலமானார்
பதிவு : ஜூலை 10, 2021, 06:11 PM
கேரள மாநிலம் கோட்டக்கல் ஆரிய வைத்யசாலை நிர்வாக அறங்காவலர் மற்றும் ஆயுர்வேத பேராசிரியர் வாரியர் 101 வயதில் காலமானார்.
கேரள மாநிலம் கோட்டக்கல் ஆரிய வைத்யசாலை நிர்வாக அறங்காவலர் மற்றும் ஆயுர்வேத பேராசிரியர் வாரியர் 101 வயதில் காலமானார். 

கடந்த 1921 ஆம் ஆண்டு பிறந்த வாரியர், ஆயுர்வேத துறையில் தனது பங்களிப்பிற்காக பல கவுரவ பட்டங்களை பெற்றுள்ளார். அவருக்கு 1999 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2010 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. 
1997 ஆம் ஆண்டு  அகில இந்திய ஆயுர்வேத மாநாடு அவருக்கு 'ஆயுர்வேத மகர்ஷி' என்ற பட்டத்தை வழங்கியது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து குணமடைந்த மருத்துவர் வாரியர், சிறுநீர் பாதை நோய்த்தொற்று காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட வாரியர், இன்று காலமானார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கலை உலகப் புகழ்பெற்ற ஆயுர்வேத சாலையாக  மாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகித்தவர், வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

248 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

1 views

தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..

8 views

ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

6 views

இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சானு - வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவரது வெற்றியை சொந்த ஊரில் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.

21 views

இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் - பாதுகாப்புப் பணியில் போலீசார்

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.