சவுதி - ஐக்கிய அரபு அமீரகம் மோதல் - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
பதிவு : ஜூலை 10, 2021, 04:55 PM
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மோதலால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மோதலால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் உலக பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் பிளஸ் குறைத்தது.

தற்போது பொருளாதார நடவடிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவரும் சூழலில் உற்பத்தி அதிகரிக்க கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டுகின்றன. 

ஆனால் மத்திய கிழக்கில் மற்றொரு எண்ணெய் வளமிக்க நாடான ஐக்கிய அரபு அமீரகம், இதனை ஏற்க மறுக்கிறது. 

அதாவது தங்களுடைய எண்ணெய் உற்பத்திக்கான  ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

பொருளாதார இயல்பு நிலைக்கு திரும்பி, தேவை அதிகரிக்கும் சூழலில் உற்பத்தியை அனுமதிக்க வேண்டும் என்கிறது  ஐக்கிய அரபு அமீரகம். 

ஆனால் சவுதி அரேபியாவும், ரஷ்யாவும் இதற்கு செவிசாய்க்க மறுக்கிறது.

இதுகுறித்து உறுப்பு நாடுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை... இதனால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க கூடும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள். 

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலர் வரையில் செல்லும் என்பதும் அவர்களுடைய கருத்தாக இருக்கிறது.  
 
மத்திய கிழக்கில் வல்லமைப்பெற்ற நட்பு நாடுகளான சவுதிக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே சமீப காலமாக விரிசல் காணப்படுகிறது. 

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதிக்கு ஆதரவாக அமீரகம் 2015-ல் களமிறங்கியது. ஆனால் 2017-ல் படைகளை வாபஸ் பெற்றது. இது முதல் உரசலாக பார்க்கப்பட்டது. 

கத்தார் மீதான தடைகளை சவுதி அரேபியா விலக்க வந்தபோது, அமீரகம் அதனை தயக்கத்துடன் ஏற்றது. ஆனால் இஸ்ரேல் விவகாரத்தில் அமீரகத்தின் நகர்வில் சவுதிக்கு உடன்பாடு இல்லாத நிலை ஏற்பட்டது.

2024-க்குள் பன்னாட்டு நிறுவனங்கள் பிராந்திய தலைமையகத்தை தங்கள் நாட்டுக்குள் அமைக்க வேண்டும் என்ற சவுதியின் எச்சரிக்கை, அமீரகத்தின் துபாயை குறிவைக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற தொடர் மோதலுக்கு மத்தியில் எண்ணெய் உற்பத்தி விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுமா என்ற கேள்வியை எழச்செய்திருக்கிறது.

இருப்பினும் இரு நாடுகளும் இதைவிட பெரிய கருத்து வேறுபாடுகளை எதிர்க்கொண்டுள்ளன என்றும்  விரிசல் நீண்டகாலம் தொடராது என்றும் அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்... 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

6 views

சீனாவில் புதிதாக 98 பேருக்கு கொரோனா - 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு

சீனாவில் புதிதாக 98 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

12 views

ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று அதிகரிப்பு - புதிதாக 17 பேருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

6 views

5-வது நாளாக தொடரும் காட்டு தீ - பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் வெளியேற்றம்

துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த‌து.

15 views

சீனா ராணுவம் துவங்கிய 94 ஆம் ஆண்டு - போர் ஒத்திகையில் ஈடுபட்ட கப்பற்படை

சீன போர்க் கப்பல் தனது படை பலத்தை உறுதிசெய்யும் விதமாக ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

9 views

இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.