கேரளாவை மிரட்டும் ஜிகா வைரஸ் - இளம் பெண்ணுக்கு ஜிகா பாதிப்பு உறுதி
பதிவு : ஜூலை 10, 2021, 10:59 AM
கொரோனா, கருப்பு பூஞ்சை தொற்றை தொடர்ந்து கேரளாவை ஜிகா வைரஸ் மிரட்ட தொடங்கியிருக்கிறது.
இளம்பெண் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமான 14 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.1947-ல் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ், அவ்வப்போது பருவகால நோயை போல மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  டெங்கு, சிக்கன்குனியா போன்று பகல் நேரங்களில் கடிக்கும் எடிஸ் கொசுக்களால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.கொசுவால் மனிதர்களை வைரஸ் தாக்கும் போது, காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள், தலை வலி, மூட்டு வலி மற்றும் தசை வலி போன்றவை அறிகுறியாக ஏற்படுகிறது.அறிகுறிகள் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் என்றும்
வைரசின் அடைகாக்கும் காலம் 3 முதல் 14 நாட்கள் என்றும் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இருப்பினும் ஜிகா பாதிப்பு கொண்ட பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் தெரிவது இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  கருவுற்ற பெண்களை வைரஸ் தாக்கும் போது கருவிலிருக்கும் குழந்தை சிறு தலையுடனும், குறைந்த மூளை வளர்ச்சியுடனும் பிறக்கும் அவலம் நேரிடுகிறது.  குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த வைரஸ் தாக்கம் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமான 14 பேரது மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.ஜூன் 7 ஆம் தேதி கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது என்றும் அவரது உடல் நலம் சீராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கேரளாவில் கொரோனா தொற்று அதிகமிருக்கும் நிலையில், ஜிகா வைரஸ் பாதிப்பு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இதற்கிடையே ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.ஜிகா வைரஸ் பாதிப்புக்கு எந்த மருந்துகளும் இல்லாத  நிலையில்,பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பொதுமக்கள் பகல், மாலை நேரங்களில் கொசு கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்கள், குழந்தைகள் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.மக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் கொசு உற்பத்தி மையங்களை அழிக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

172 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

"இளைஞர்களின் கனவு நாயகன்" அப்துல் கலாம் நினைவு தினம்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

6 views

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

34 views

காலம் போற்றும் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று... திறமைக்கு வசதி வாய்ப்பு ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த இளைஞர்களின் எழுச்சி நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

14 views

100 நாள் வேலைத் திட்டம் : "வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை" - மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி

மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

10 views

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

19 views

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம் - மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழக்கம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.