ஜப்பானில் கொரோனா தொற்று அதிகரிப்பு - டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்
பதிவு : ஜூலை 10, 2021, 09:51 AM
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் ஜப்பான் அரசு அவசர நிலை பிரகடனம் செய்திருக்கும் நிலையில், இதனால் அந்நாட்டுக்கான இழப்புகள் என்ன...? வீரர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன ...? என்பதை பார்க்கலாம்...
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.ஏறக்குறைய 1 லட்சம் கோடி ரூபாயை செலவழித்து போட்டியை நடத்தும் நாடுகளுக்கு சுற்றுலா, வர்த்தகம் மூலமே வருவாயும், பிரமாண்ட போட்டியை நடத்திய தேச கவுரவம் கிடைக்கிறது. ஆனால் தற்போது கொரோனாவால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தும் ஜப்பானுக்கு வருவாய் என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதித்த ஜப்பான், டோக்கியோவில் அவசரநிலையை அறிவித்து உள்ளதால் உள்நாட்டு பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஜப்பான் எதிர்பார்த்த சுற்றுலாத்துறை வருவாய்க்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக 10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என நோமுரா ஆராய்ச்சி (Nomura Research)நிறுவனம் கணித்துள்ளது.
6 ஆயிரம் கோடிக்கு மேலான டிக்கெட் வருவாயும் கேள்விக்குறியாகியிருக்கிறது.இப்படியொரு சூழலில் ஏறத்தாழ 205 நாடுகளில் இருந்து வரும் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களை தொற்றிலிருந்து பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஜப்பானில் தரையிறங்கியதும் கோவிட் கண்காணிப்பு செல்போன் செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும்.செல்லும் இடங்களை கண்காணிக்கும் அந்த செயலியில் வீரர்கள் தினசரி தங்களுடைய உடல் வெப்ப நிலை, அறிகுறி நிலவரத்தை பதிவிட வேண்டும்.தினசரி இருமுறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர் தனிமைப்படுத்தப்படுவார், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்படுவர்.விளையாடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாகும்.அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் செல்லலாம்.பிரத்யேக ஒலிம்பிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு அரங்கில் நாளொன்றுக்கு 230 மருத்துவர்கள், 310 செவிலியர்கள் பணியில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் வருவாய் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் ஜப்பானுக்கு கூடுதல் செலவாகவே உருவெடுத்திருக்கிறது.  அதே சமயம் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் உணர்வை வீரர்களுக்கு தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக வரலாற்றில் மிகப்பெரும் சவால் நிறைந்த ஒலிம்பிக் போட்டியாக டோக்கியோ ஒலிம்பிக் உருவாகியுள்ளது. தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

15 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

ஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.

14 views

அமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.

9 views

சீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...

சீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.

13 views

கொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை

கொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.

8 views

சர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.

145 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.