ரஷ்யா சென்றுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் - ஒப்பந்தங்களை சீனா மீறுவதாக குற்றச்சாட்டு
பதிவு : ஜூலை 10, 2021, 09:35 AM
எல்லை பிரச்சினை தொடர்பான ஒப்பந்தங்களை சீனா பின்பற்றவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள ஒரு ஆய்வு நிறுவனத்தில் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், கடந்த சில வருடங்களாக, எல்லைப் பிரச்சனை தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தங்களை சீனா பின்பற்றவில்லை என குற்றம்சாட்டினார்.கடந்த 45 வருடங்களாக இந்தியா சீனா எல்லைப் பகுதியில் மோதல்கள், பிரச்சனைகள் எதுவும் ஏற்படாத நிலையில், 2020 ஜூனில் லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல்களினால் இந்த அமைதி குலைந்துள்ளதாக கூறினார். எல்லைப் பிரச்சனையை தீர்க்க, கடந்த ஆண்டு மாஸ்கோவில் இந்தியா மற்றும் சீனா இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில், ஒரு ஐந்து அம்ச தீர்வு ஒன்று இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.எல்லைப் பிரச்சனையை தவிர, பல்வேறு இதர பிரச்சனைகளும் இந்தியா சீனா இடையே நீடிப்பதாக, ஜெய்சங்கர் தனது உரையில் கூறினார். பசிபிக் பிராந்தியத்தில், ரஷ்யாவும், இந்தியாவும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 views

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : "மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

5 views

அவையின் மையப்பகுதியில் முழக்கம் - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆறு பேரை இன்று நாள் சஸ்பெண்ட் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

5 views

வேளாண் திருத்தச் சட்டம் - 2 எம்.பி.கள் மோதல்

வேளாண் சட்டத்திருத்த விவகாரத்தில் இரு எம்.பி.க்கள் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 views

மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவி; வழக்கறிஞர் தெரிவிக்கும் எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் லோகேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

4 views

பத்திரிகையாளர்களை உளவு பார்த்த விவகாரம் - சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்க கோரிக்கை

பத்திரிகையாளர்களை பெகாசஸை கொண்டு உளவு பார்த்த விவகாரத்தை சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்து விசாரிக்க கோரி 'எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா' உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.