கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் - சிறப்பாக இருப்பதாக கூறும் செளமியாசுவாமிநாதன்
பதிவு : ஜூலை 10, 2021, 09:00 AM
கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள் முடிவுகள் சிறப்பாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கான மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. கோவேக்சினின் நோய் எதிர்ப்பு திறன் மிக அதிகமாக உள்ளதாக கூறிய, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், டெல்டா ரக வைரஸுக்கு எதிராக இதன் செயல் திறன் சற்று குறைவாக இருந்தாலும், சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார். கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற, ஜூன் 23ஆம் தேதி, ஜெனிவாவில், உலக சுகாதார நிறுவன அதிகாரிகளுடன் பாரத் பயோடெக் நிறுவன அதிகரிகள் முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். அவசர கால பயன்பாட்டிற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளின் செயல் திறன்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இவற்றைப் பற்றி மேலும் அதிக தகவல்களை சேகரிப்பதாகவும் செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். உலகில் பல பகுதிகளில் கொரோனா தொற்றுதல் அதிகரித்துள்ளதாகவும், அமெரிக்காவை தவிர வேறு எங்கும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை வெகுவாக குறையவில்லை என்றும் கூறினார். 
மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை என்று கூறிய செளமியா சுவாமிநாதன், முதல் கட்ட தடுப்பூசி விநியோகத்தை அனைத்து நாடுகளும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.டெல்டா ரக வைரஸ் வெகு வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால், கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், இந்த வைரஸ் மேலும் உருமாறினால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

308 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

246 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

வானெங்கும் வண்ண வண்ண பலூன்கள் - பலூன் திருவிழா கோலாகலம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகணத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பலூன் திருவிழா, காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது.

8 views

மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்

சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

10 views

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

14 views

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

18 views

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

87 views

ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரிக்கும் கொரோனா - மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது விளையாட்டு வீரர்களை அச்சமடையச் செய்து உள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.