கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் - எச்சரித்த ஆட்சியர்
பதிவு : ஜூலை 10, 2021, 08:42 AM
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக கரூரில் பட்டாசு வெடித்த பாஜகவினருக்கும் - போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரானதை அடுத்து, புதிய தலைவராக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.இதனை கொண்டாடும் விதமாக கரூரில் பாஜகவினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். பேருந்து நிலையம் அருகே தொண்டர்களுடன் குவிந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்,  போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டிக்காட்டி, கூட்டத்தை கலைக்குமாறும், அனுமதியின்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி அங்கிருந்து சென்றார்.மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பொறுப்பாளர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இருப்பினும் பாஜகவினர் வாகனத்தில் ஏற மறுத்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஊரடங்கு விதிகளை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்...

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.

13 views

தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

11 views

ஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

27 views

குப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23 views

சங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.