"கேளிக்கை வரி அளிப்பதில் பாகுபாடு"-உயர்நீதிமன்றம்
பதிவு : ஜூலை 09, 2021, 04:40 PM
திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கும் விவகாரத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"கேளிக்கை வரி அளிப்பதில் பாகுபாடு"-உயர்நீதிமன்றம் 

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கும் விவகாரத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிபுணர் குழு தங்களது  திரைபடங்களுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக பாகுபாடு காட்டுவதாக கூறி  ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில்  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,   ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த படங்களுக்கு வரி விலக்கு கோரி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் உள்ளதாகவும், அந்த நிறுவனம் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமானது என்பதால் மட்டுமே வரி விலக்கு அளிப்பதில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறினார்.வணிக வரி துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் எந்த குறிப்பிட்ட குற்றசாட்டையும் கூறாமல் நிபுணர் குழுவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளதாக கூறினார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த குழுவில்  ஆளும் கட்சிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.இது போன்ற குழுக்களை அமைக்கும்போது அரசியலமைப்பிற்கு எதிரான நடைமுறைகள் இருந்தால் அதனை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் பாகுபாடு காட்டியது உறுதியாகியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இது போன்று நிபுணர் குழுவை நியமிக்கும் போது நேர்மையானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறினார்.திரைபடங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்காக அமைக்கப்படும் குழு பாரபட்சம் இல்லாததை உறுதி செய்ய  குழுவின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மாற்றி அமைக்கும் வகையில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

285 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

40 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

'வலிமை' முதல் பாடல் வெளியீடு எப்போது? - இன்று இரவு 7 மணிக்கு அறிவிப்பு

வலிமை படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3 views

ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ் - Walk of Fame அரங்கில் நட்சத்திரம் பதிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ்சுக்கு, Walk of Fame அரங்கில் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ளது.

3 views

மகேஷ் பாபுவின் புதிய திரைப்படம் - "சர்க்கார் வாரி பாட்டா" : 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு

மகேஷ் பாபு நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

31 views

"மாரியம்மாவாக கொண்டாடுவது மகிழ்ச்சி" - 'சார்பட்டா பரம்பரை' துஷாரா விஜயன் நெகிழ்ச்சி

செல்லுமிடமெல்லாம் மக்கள், மாரியம்மாவாக கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாக சார்பட்டா பரம்பரை திரைப்பட நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.

25 views

நடிகர் சோனு சூட் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டிய சோனு சூட்

நடிகர் சோனு சூட் மும்பையில் தனது ரசிகர்கள் மத்தியில் பிறந்த நாளை கொண்டாடினார்.

12 views

மீண்டும் 'டெடி' இயக்குநருடன் ஆர்யா கூட்டணி - வித்தியாசமான கதையுடன் படம் உருவாக்கம்

சார்பட்டா பரம்பரை படம் வெற்றி பெற்றதை அடுத்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.