டோக்கியோ நகரில் ராட்சத பூனை - அனைவரையும் கவரும் 3டி தொழில்நுட்பம்
பதிவு : ஜூலை 09, 2021, 03:52 PM
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒரு பிரம்மாண்டமான விளம்பர திரையில், முப்பரிமாண தோற்றத்தில் தோன்றும் ராட்சத பூனை ஒன்று பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
ஜூலை 23இல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது.டோக்கியோ நகரில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள பிரம்மாண்டமான எல்.இ.டி திரையில் தோன்றும் ராட்சத பூனை ஒன்று நிஜப் பூனை போலவே காட்சியளிக்கிறது.4000 பிக்சேல்கள் அடர்த்தி கொண்ட, 154 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான எல்.இ.டி திரை ஒன்று, ஷின்ஜுகு ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது.இதில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தோன்றும் ராட்சத பூனை,  டோக்கியோவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்த வழியே செல்பவர்கள் இந்த ராட்சத பூனையை தங்களின் செல்போன் மற்றும் கேமராக்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.கொரோனா பாதிப்புகள் பற்றிய கவலைகளை சற்று நேரம் மறந்து, பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த இந்த ராட்சத பூனை உதவுகிறது, என மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

அமெரிக்க ராணுவ தலைமையகம் நுழைவாயிலில் நடந்த துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகன் நுழைவு வாயில் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 views

பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி - பிரதமரின் வீடு வாடகைக்கு விடப்படுகிறது

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் பாகிஸ்தான் அரசு, பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தை வாடகைக்கைக்கு விட முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 views

நியூயார்க் ஆளுநர் பதவி விலக வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

50 views

விண்வெளி மையத்தில் 3 விண்வெளி வீரர்கள் - விண்வெளியில் ரத்த மாதிரி பரிசோதனை

சீனாவின் சென்ஷோ-12 விண்கலத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்கள், தங்களது ரத்த மாதிரிகளை தாங்களே பரிசோதித்து வருகின்றனர்.

5 views

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் - மக்களவை 3-வது முறை ஒத்திவைப்பு

பெகாசஸ் உளவு விவகாரம் காரணமாக இன்று ஒரே நாளில் மக்களவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

9 views

ஈரான் அதிபராகும் இப்ராஹிம் ரைசி..அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்க உறுதி - அணுசக்தி உடன்படிக்கை சாத்தியமா ?

ஈரான் அதிபராக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைசி, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சர்வாதிகாரத்தனமான பொருளாதார தடைகளை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.