20 ஆண்டுகளாக தொடரும் உள் நாட்டு போர் - படைகளை வாபஸ் பெறும் ஜோ பைடன்
பதிவு : ஜூலை 09, 2021, 03:02 PM
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர், ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர், ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 2001 செப்டம்பர் 11இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரங்களை, ஆப்கானிஸ்தானை சேர்ந்த அல் கொய்தா பயங்கரவாதிகள் தகர்த்தனர். இதில் 2977 பேர் பலியாகினர்.இதைத் தொடர்ந்து, பின் லேடன் தலைமையிலான அல் கொய்தா பயங்கரவாதிகளை அழிக்க, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 2001 அக்டோபரில் படை எடுத்து, அங்கு அல் கொய்தாவிற்கு ஆதரவு அளித்து வந்த தாலிபான்கள் ஆட்சியை அகற்றியது. 
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தை வரும் ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக திரும்பப் பெற உள்ளதாக அமெரிகக் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். தாலிபான்களுடன் உள்நாட்டுப் போர் அங்கு தொடர்ந்து நடை பெறும் நிலையில், இந்த பிரச்சனைக்கு ராணுவ ரீதியான தீர்வு சாத்தியமில்லை என்றும், இதற்காக அமெரிக்க ராணுவ வீரர்களை தொடர்ந்து பலி கொடுக்க முடியாது என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய தேசத்தை உருவாக்கவதற்காக அமெரிக்க படைகள் அங்கு அனுப்படவில்லை என்றும், ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஒருங்கிணைந்து தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று ஜோ பைடன் கூறினார். தாலிபான்களை தான் நம்பவில்லை என்றும், ஆனால் ஆப்கன் ராணுவம், தாலிபான்களின் தாக்குதல்களை முறியடிக்கும் என்று நம்புவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.ஆனால் அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆபாகானிஸ்தானின் பல மாவட்டங்களை தாலிபான் படையினர் படிப்படியாக ஆக்கிரமித்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி - பிரதமரின் வீடு வாடகைக்கு விடப்படுகிறது

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் பாகிஸ்தான் அரசு, பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தை வாடகைக்கைக்கு விட முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 views

நியூயார்க் ஆளுநர் பதவி விலக வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

49 views

விண்வெளி மையத்தில் 3 விண்வெளி வீரர்கள் - விண்வெளியில் ரத்த மாதிரி பரிசோதனை

சீனாவின் சென்ஷோ-12 விண்கலத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்கள், தங்களது ரத்த மாதிரிகளை தாங்களே பரிசோதித்து வருகின்றனர்.

4 views

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் - மக்களவை 3-வது முறை ஒத்திவைப்பு

பெகாசஸ் உளவு விவகாரம் காரணமாக இன்று ஒரே நாளில் மக்களவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

9 views

ஈரான் அதிபராகும் இப்ராஹிம் ரைசி..அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்க உறுதி - அணுசக்தி உடன்படிக்கை சாத்தியமா ?

ஈரான் அதிபராக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைசி, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சர்வாதிகாரத்தனமான பொருளாதார தடைகளை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...

9 views

சீனாவிற்கு எதிராக அணி திரளும் நாடுகள் - மலபார் பயிற்சியில் குவாட் போர் கப்பல்கள்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவின் போர் கப்பல்கள் ஆகஸ்ட் இறுதியில், பசிபிக் பெரும்கடல் பகுதியில் கூட்டாக, போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.