ரத்தம் வடிய..'வெறித்தனம்'பாடல் பாடிய சிறுவன் - மருத்துவர்களின் செயலால் நெகிழ்ச்சி
பதிவு : ஜூலை 09, 2021, 02:14 PM
விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த சிறுவனுக்கு, நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தை போட்டு காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ள ருசிகர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த சிறுவனுக்கு, நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்தை போட்டு காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ள ருசிகர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. குழந்தைகள் முதல் பலருக்கும் மிகவும் பிடித்த நடிகராக உள்ளார், விஜய்.... விஜய் ரசிகர் பட்டாளத்தில் குட்டீஸ்களுக்கும் தனி இடமுண்டு.... விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சைக்கு ஒத்துழைக்காத நிலையில், விஜய்யின் பிகில் படம் பார்க்க வைத்து சிறுவனின் உயிரை காத்துள்ளனர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..சென்னை மயிலாப்பூரில் தனது மாமாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், 10 வயது சிறுவன் சசிவர்ஷனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் அடிபட்டு உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சிறுவனின் தலையில் தையல் போட வேண்டிய கட்டாயம்... அதற்காக மயக்க ஊசி செலுத்த மருத்துவர்கள் முயற்சித்த போது, ஒத்துழைக்க மறுத்து, ஊசியை சிறுவன் தட்டி விட்டுள்ளான்... குழந்தையை அதன் பாணியில் கையாண்ட மருத்துவர்கள்... பேச்சு கொடுக்க தொடங்கியுள்ளனர்... அப்போது தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்று சிறுவன் கூற... பிடித்த படம் என்ன என்று அடுத்த கேள்வியை முன்வைத்தனர் மருத்துவர்கள்...  தனது தலையில் இருந்து ரத்தம் வடிவதை பொருட்படுத்தாமல்... பிடித்த படம்  பிகில் என சற்று யோசிக்காமல் பதிலளித்துள்ளார், அந்த சிறுவன்... உடனே மருத்துவர்கள் பிகில் படத்தை சிறுவனுக்கு செல்போனில் காட்டியுள்ளனர்... கொஞ்சம் கூட வலியை பொருட்படுத்தாமல் வெறித்தனம் பாடலை சிறுவன் பாட... அசரும் நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி, தையல் போட்டு சிகிச்சையை முடித்துள்ளனர், மருத்துவர்கள்... 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

25 views

ஹிப் ஹாப் தமிழா ஆதி யூடியூப் சேனல் முடக்கம் - வீடியோக்களை அழித்த ஹேக்கர்கள்

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனலை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

20 views

"நூறு முத்தங்கள் கொடுத்து நன்றி சொல்லுவேன்" - இயக்குநர் பா.ரஞ்சித்தை பாராட்டிய நாசர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

71 views

70களின் அரசியலை பேசும் சார்பட்டா பரம்பரை - உதயநிதி ஸ்டாலின் பாராட்டி ட்வீட்

சமீபத்தில் வெளியாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

83 views

கார் விபத்தில் தோழியை பறிகொடுத்த யாஷிகா - அதிவேகம், அஜாக்கிரதையால் விபத்து

மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகை யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விபத்து முதல் போலீசார் நடவடிக்கை வரை நடந்தது என்ன விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

175 views

கமல் படத்தில் மகன் வேடத்தில் நடிக்கிறார் காளிதாஸ்

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம் புதியதாக இணைந்துள்ளார்.

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.