நடந்ததை வெளியே கொண்டு வந்த சிசிடிவி - பயத்​தில் தற்கொலை செய்து கொண்ட பெண்
பதிவு : ஜூலை 09, 2021, 02:06 PM
கோவையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் மரணத்திற்கு பின்னால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவையில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் மரணத்திற்கு பின்னால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் சீனிவாசன்.  இவரின் மனைவி கங்காதேவி அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் பணி முடிந்து வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த சீனிவாசன், மனைவியை தேடி அழகு நிலையம் சென்றுள்ளார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த கங்கா தேவியை கண்டு அவர் பதறிப் போனார். உடனே அவரை மீட்டு விசாரித்த போது 3 பேர் கொண்ட கும்பல் தன்னை கட்டிப் போட்டுவிட்டு 19 சவரன் நகைகளை பறித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கருமத்தம்பட்டி போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கிய நிலையில், கங்கா தேவி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தவே போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அழகு நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது கங்கா தேவி சொன்னதுபோல 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அப்போது தான் போலீசின் விசாரணை வளையத்திற்குள் வந்தார் முத்துப்பாண்டி. இவருடன் முறையற்ற உறவில் இருந்த கங்காதேவி, நகைகளை முத்துப்பாண்டியிடம் கொடுத்துவிட்டு கொள்ளை என நாடகம் போட்டது விசாரணையில் அம்பலமானது.இதை கணவர் போலீஸ் வரை கொண்டு செல்லவே, பயந்து போன கங்காதேவி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.  இதையடுத்து, முத்துப்பாண்டியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 19 சவரன் நகைகளை மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.

14 views

தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

12 views

ஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

29 views

குப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23 views

சங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.