தமிழகத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
பதிவு : ஜூலை 09, 2021, 08:53 AM
தமிழகத்தில் பல்வேறு நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம்  கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1-மணி நேரமாக மழை வெளுத்து வாங்கியது. பெருமாட்டு நல்லூர், காயரம்பேடு, தங்கப்பாபுரம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

மதுரை காளவாசல், பைபாஸ் ரோடு, ஆரப்பாளையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணாநகர், பிபிகுளம், மாட்டுத்தாவணி, தெப்பகுளம், முனிச்சாலை, விரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள  சோத்துப்பாறை அணை, கும்பக்கரை, மஞ்சளார், முருகமலை, சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்   இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காரியாபட்டி, நரிக்குடி, வீரசோழன், ஆவியூர், கல்குறிச்சி, மல்லாங்கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

விருதுநகர்  மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி , சதுரகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. 
இதனால் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடுகசாத்து, விண்ணமங்கலம், பையூர், கண்ணமங்கலம், குன்னத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. 

ராணிப்பேட்டை மாவட்டம்  கலவை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி அரக்கோணம் மற்றும்  சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால்  சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

116 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

86 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

35 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

17 views

பிற செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

13 views

தொலைதூர கல்வி - அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு

திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

8 views

+2 தேர்வு - மாற்று திறனாளிகளுக்கு விலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு அளித்துள்ளார்.

8 views

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

9 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

11 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.