மநீம-வில் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன் திமுகவில் இணைந்தார்
பதிவு : ஜூலை 08, 2021, 10:37 PM
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்தவர், மகேந்திரன். கட்சியின் முக்கிய முகமாக செயல்பட்ட இவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன்பிறகு, சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் தோல்வியை தழுவினார். இந்தத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது. இதன்பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் அறிவித்தார். இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில், மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.     

பிற செய்திகள்

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

9 views

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

9 views

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

16 views

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.

24 views

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

19 views

"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.