வலுவான இந்திய அணிக்கு அடித்தளமிட்டவர் - வங்கத்து புலியின் அதிரடியும்...பதிலடியும்..
பதிவு : ஜூலை 08, 2021, 01:31 PM
மாற்றம் : ஜூலை 08, 2021, 01:36 PM
இன்று தனது 49 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார், வங்கத்து புலி சவுரவ் கங்குலி.... இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய உயிரோட்டத்தை கொடுத்த கங்குலி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
இன்று தனது 49 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார், வங்கத்து புலி சவுரவ் கங்குலி.... இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய உயிரோட்டத்தை கொடுத்த  கங்குலி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்... 

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும் அவரது கேப்டன் ஷிப்பையும் கொண்டாடி வரும் ரசிகர்கள் எல்லாம் ஒரு காலத்தில் கேப்டன் சவுரவ் கங்குலியின் ஃஆப் சைடு பவுண்டரியையும், இமாலய சிக்ஸரையும் கொண்டாடி தீர்த்தவர்கள்..... 

இன்று கிரிக்கெட்டில் விராட் கோலி காட்டும் ஆக்ரோஷத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றால்... ஒரு காலத்தில் மைதானத்தில் கங்குலி வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தையும், அவரது ஆளுமையையும் ரசிக்காத ரசிகர்களே கிடையாது என்று கூறலாம்.... 

இப்படி தலைமுறைகளை கடந்து, இன்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ஜொலித்து கொண்டிருக்கிறார், கொல்கத்தாவின் மகாராஜா சவுரவ்.... 

வலுவான அணி இருந்தும் உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற இந்திய அணி 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை என்றால்... அந்த வலுவான அணிக்கு அடித்தளமிட்டவரே, கங்குலி தான் என்றால் அது மிகையாகாது... 

1999 உலக கோப்பை தோல்வி, சூதாட்ட சர்ச்சை, நிரந்தர விக்கெட் கீப்பர் இல்லாமல் தடுமாற்றம், ஆல் ரவுண்டரின்றி தவிப்பு என ஒட்டுமொத்த இந்திய அணியும் துவண்டு போய் இருந்த கால கட்டம் அது.... 

கேப்டன் பதவியில் இருந்து சச்சின் விலகியதும்.... இக்கட்டான சூழலில் கேப்டனாக பதவியேற்றவர் தான், கங்குலி... 

தரவரிசைப்பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த இந்திய அணியை, தன்னுடைய தனித்துவமான கேப்டன்ஷிப்பால் 2-ஆம் இடத்திற்கு கொண்டு வந்தவர் தான், இந்த வங்கத்து புலி... 

அன்று கிரிக்கெட் உலகின் சிம்ம சொப்பனமாக இருந்த ஆஸ்திரேலிய அணிக்கே கடும் சவால் விடும் அளவிற்கு இந்திய அணியை வழி நடத்தியவர்...

5 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியை வழி நடத்திய இந்த ஜாம்பவான், 2003 ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையின் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்து சென்றவர்.... 

1999 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக கங்குலி விளாசிய 183 ரன்கள் தான் இன்றும்... உலக கோப்பை வரலாற்றில் இந்திய வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்.....

ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 4 ஆட்ட நாயகன் விருதை பெற்றவர்.... அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியவர்... ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை போட்டியில் மூன்று சதம் விளாசிய முதல் வீரர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர், தாதா என செல்லமாக அழைக்கப்படும் கங்குலி.... 

இங்கிலாந்து அணிக்கு எதிரான நாட்வெட்ஸ் தொடரில்... தனது சட்டையை கழற்றி, வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கங்குலியை இன்றும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்... 

வான்கடே மைதானத்தில் சட்டையை கழற்றி வெற்றியை கொண்டாடிய இங்கிலாந்து வீரர் பிளிண்டாப்பின் செயலுக்கு கங்குலி கொடுத்த பதிலடி தான் இது... 

இப்படி தனது அதிரடியினாலும், பதிலடியினாலும் கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்களின் நீங்கா இடத்தை ஆக்கிரமித்தவர்... வங்கத்து புலி சவுரவ் கங்குலி என்றால் அது மிகையாகாது...

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

304 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

245 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

150 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி-2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

11 views

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

37 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் போட்டி - ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

7 views

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

41 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை மேரி கோம் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துசண்டைப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் வெற்றி பெற்று உள்ளார்.

8 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் :இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்.. இந்தியாவின் வெற்றி தொடருமா?

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் :இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்.. இந்தியாவின் வெற்றி தொடருமா?

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.