ரஷ்யா செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - ரஷ்யா பயணத்தின் நோக்கம் என்ன?
பதிவு : ஜூலை 08, 2021, 12:33 PM
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக, ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக, ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...


ஈரான் தலைநகர் டெஹ்ரான் வழியாக, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு செல்லும் ஜெய் சங்கர், அங்கு ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு பிராந்திய ரீதியான விவகாரங்கள் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியா ரஷ்யா வர்த்தக பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுடப், கலாச்சார கூட்டுறவுக்கான ஆணையத்தின் உறுப்பினரும், ரஷ்யாவின் துணை பிரதமருமான யுரி போரிஸோவுடன் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரகம் கூறியுள்ளது. 

ஜெய்சங்கர், மாஸ்கோ, செர்கி லாவ்ரோவ், கொரோனா, ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள்

இந்த ஆண்டில் நடைபெற உள்ள இந்தியா ரஷ்யா உச்சி மாநாட்டிற்கு முன் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால், தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதை பற்றியும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் படையினர் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிகாரத்தை கைபற்ற தீவிர முயற்சி எடுத்து வருவதால், இதன் விளைவாக அங்கு உள்நாட்டு போர் தீவிரமடைந்தால், அது ரஷ்யா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

249 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

200 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல்.. லட்சத்தீவுக்கு வரும் 26ஆம் தேதி பயணம்

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல்.. லட்சத்தீவுக்கு வரும் 26ஆம் தேதி பயணம்

7 views

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

29 views

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

35 views

தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..

9 views

ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

8 views

இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.