காதல் வலை வீசி கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் 3 பேர்!
பதிவு : ஜூலை 08, 2021, 11:48 AM
10 ஆம் வகுப்பில் பெயிலான ஒரு கும்பல், காதல் வலை வீசி இளைஞரை மிரட்டி பணம் பறித்து இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
10 ஆம் வகுப்பில் பெயிலான ஒரு கும்பல், காதல் வலை வீசி இளைஞரை மிரட்டி பணம் பறித்து இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் சம்பவத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடன் படித்த மாணவி ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இவர்களின் நட்பு பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்துள்ளது. 

இதனிடையே திடீரென அந்த பெண் தன்னுடைய டூவீலர் அடமானத்தில் உள்ளதாகவும், இதற்காக 23 ஆயிரம் ரூபாய் பணம் தேவை என்றும் கூறவே, அதை நம்பி அந்த இளைஞரும் பணத்தை கொடுத்துள்ளார். 

அதன்பிறகு 2 நாட்கள் கழித்து ஆனைக்கட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் அந்த பெண். வெளியே தன்னுடைய மாமா நிற்பதாகவும், டூவீலர்க்கு வட்டி பணம் 5 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என மீண்டும் பணம் கேட்டுள்ளார். 

உஷாரான அந்த இளைஞர் பணம் தர மறுக்கவே, அந்த பெண் சிலருக்கு செல்போன் தகவல் கொடுத்தார். அப்போது உள்ளே வந்த 2 பேர் அந்த இளைஞரை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக அந்த இளைஞர் தடாகம் போலீசில் புகார் அளித்தார். பெண் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

கோவை காந்திமா நகரை சேர்ந்த பார்கவி என்ற பெண் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. பிஎஸ்சி படித்த பார்கவி, தன் காதலன் ஹபீப் அலி மற்றும் அப்துல் கலாம் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டது உறுதியானது. 

இதில் ஹபீப் அலியும், அப்துல் கலாமும் பத்தாம் வகுப்பு பெயிலானவர்கள் என்பதும், வசதியாக வாழ வேண்டும் என்ற நோக்கில் இதுபோல் செயல்பட்டதும் தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

121 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

29 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

12 views

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

9 views

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.

25 views

"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

78 views

கோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.