இங்கிலாந்து அணியை மிரட்டிய கொரோனா - 3 வீரர்கள் உட்பட 7 பேருக்கு தொற்று
பதிவு : ஜூலை 07, 2021, 08:17 PM
கொரோனா பரவலால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 9 வீரர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்ற இங்கிலாந்து அணி ,அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.இதனிடையே இலங்கைக்கு எதிரான போட்டியின் போது, இங்கிலாந்து அணியினருக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
பரிசோதனை முடிவுகளில் 3 வீரர்கள் உட்பட இங்கிலாந்து அணியினர் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற அனைத்து வீரர்களையும் தனிமைப்படுத்தியதோடு,பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், புதிய அணியை அறிவித்துள்ளது.அதில், காயத்தில் இருந்து மீண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த அணியில் 9 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.வீரர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறினார்களா என புகார் எழுந்துள்ள நிலையில், அனைவரும் கட்டுப்பாடுகளை பின்பற்றி வருவதாகவும், தொற்று எங்கிருந்து பரவியது எனக்கூற முடியவில்லை என இங்கிலாந்து நிர்வாகம் கூறியுள்ளது.எனினும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 16ம் தேதி தொடங்கும் டி-20 தொடரில் வழக்கமான சீனியர் அணியே பங்கேற்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது..

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

309 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

246 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டி - தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வாள் வீச்சுப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி அடைந்து உள்ளார்.

2 views

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

3 views

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி-2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

12 views

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

37 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் போட்டி - ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

7 views

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.