ஆப்கனில் நிலவும் பதற்றமான சூழ்நிலை - இந்திய அதிகாரிகளைத் திரும்பப் பெற முடிவு
பதிவு : ஜூலை 07, 2021, 08:14 PM
ஆப்கனிஸ்தானில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்திய ராணுவ அதிகாரிகள் பலரும், ஆப்கன் படை வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் பயிற்சி அளிக்கும் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது அமெரிக்காவும் தனது நாட்டுப் படையை ஆப்கனிலிருந்து திரும்பப் பெற்றுள்ளதால், ஆப்கனிஸ்தானில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து அந்நாட்டின் பல பகுதிகளிலும் வசிக்கும் நம் நாட்டு மக்கள் மற்றும் தூதரக, ராணுவ அதிகாரிகளை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், அனைத்து அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுவார்களா அல்லது முக்கிய அதிகாரிகள் ஆப்கனிஸ்தானிலேயே தங்குவார்களா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு ஆப்கனிஸ்தானில் பல பகுதிகள் பயங்கரவாதிகளின் கைவசமாகி வருகின்றன. இந்நிலையில் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல நாட்டு தூதரகங்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அரசுகள் முடிவெடுத்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

245 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

131 views

பிற செய்திகள்

செல்ல பிராணிகளை அனுமதிக்கும் மதுபான விடுதி - நாய்களுக்கான பிரத்யேக பானங்கள்

லண்டனில் ஒரு மதுபான விடுதியில், நாய்களுக்காக, காய் கறிகள், பழங்களில் செய்யப்பட்ட தனித்துவம் மிக்க பானங்கள் வழங்கப்படுகின்றன. அது பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

22 views

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - ஊருக்குள் புகுந்த வெள்ளம்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

9 views

வெள்ளப்பெருக்கில் சிக்கிய மருத்துவமனை - பச்சிளங்குழந்தை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சீனாவின் ஜெங்ஜவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவமனை ஒன்றின், "குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்" இருந்து பச்சிளங்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

10 views

மறைந்த ஹைத்தி அதிபரின் இறுதிச் சடங்கு - கலவரங்களுக்கு மத்தியில் நடந்த நிகழ்வு

ஹைத்தி அதிபர் ஜொவெனல் மொயிஸ், நாட்டு மக்களுக்காக உயிரிழந்ததாக அவரது மகன், தன் தந்தையின் இறுதிச் சடங்கில் வருத்ததோடு தெரிவித்தார்.

8 views

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன நகரம் - 1,000 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக, பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

14 views

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.