"வீரப்பனுக்கே ஆயுதம் சப்ளை செய்தேன்" - குடிபோதையில் ரகளை செய்த ஆசாமிகள்
பதிவு : ஜூலை 06, 2021, 08:31 PM
வீரப்பனுக்கே ஆயுதம் சப்ளை செய்தோம் என போலீசாரிடம் இரண்டு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தை விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, வடிவேலு மாட்டிக்கொள்ளும் இந்த திரைப்படத்தின் காட்சிகளை போலே நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள மதுக்கடை ஒன்றில், குடிபோதையில் 3 பேர் ரகளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், தலைகால் புரியாமல் குடிபோதையில் அட்டூழியம் செய்தவர்களை காவல்நிலையம் அழைத்து வந்தனர் போலீசார்.வந்துள்ளது காவல்நிலையம் என்றுகூட அறியாமல் சேட்டையை தொடர்ந்த ஆசாமிகள், போதையின் உச்சமாக நாங்கலாம் வீரப்பனுக்கே ஆயுதம் கடத்துனவங்க என போலீசாரிடமே போதையில் உளறினர்.. இதனை பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த போலீசார் 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர். மறுபக்கம் இவர்களோ நாங்கள் என்ன தவறு செய்தோம் விடுங்க சார், விடுங்க சார் என போதையில் கூறியதையே திரும்ப திரும்ப கூறி வந்தனர். 
ஆம்புலன்ஸ் வந்தது... போதை ஆசாமிகள் வண்டியில் ஏற்றப்பட்டனர். அப்போது மருத்துவ உதவியாளர் பரிசோதனைக்காக அருகில் செல்ல முயன்ற போது, அதுவரை மாஸ்க் போடாத அந்த ஆசாமி, பயத்தில் கொரோனா வந்துவிடும் எனக்கூறி அவசர அவசரமாக மாஸ்க் அணிந்தார்.இருவரையும் கோவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூறிய போலீசார், அவர்களுக்கு போதைய தணிய வைக்கும் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதற்கு உடன்படியாத அந்த நபர், தனக்கு ஏதாவது நேர்ந்தால் வழக்கு தொடர்வேன் என போலீசாரை மிரட்டினார். தன்நிலை மறந்து குடிபோதையில் இருவர் ரகளை செய்த சம்பவம், காண்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது..தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

25 views

பிற செய்திகள்

"டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை தேவை"- தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகம் மற்றும் புதுசேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் தீவிரம்: முகக்கவசம் இல்லையென்றால் அபராதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.

8 views

"புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு" - ஆட்சியர் கவிதா ராமு பேட்டி | Pudukkottai

புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்

21 views

மருத்துவரிடம் மோசடி கும்பல் கைவரிசை - வங்கி கணக்கில் இருந்து ரூ.2.40 லட்சம் அபேஸ்

சென்னையில் மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை நூதனமான முறையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

19 views

இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதியின் உருவப்படம் இன்று திறப்பு : விழாவில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர்

5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

33 views

தொடர்ந்து 10 மணி நேரம் கராத்தே பஞ்ச் - கராத்தே மாணவர்கள் சாதனை

உலக சாதனை முயற்சியாக தொடர்ந்து 10 மணி நேரம் பஞ்ச் செய்து திருமங்கலம் கராத்தே மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.