மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் வன்முறை - தமிழ் சிறுமிக்கு கேரளாவில் நடந்த விபரீதம்
பதிவு : ஜூலை 06, 2021, 07:27 PM
கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய செய்தித் தொகுப்பு...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட கிராமத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. பெற்றோர் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அவர்களின் மகளான 6 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அர்ஜூன் என்ற 22 வயது இளைஞர், சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அவ்வப்போது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பதுமாக இருந்து வந்த அவர், சம்பவத்தன்று சிறுமியை தனியே அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். 
இதில் சிறுமி மயங்கி விழவே, அவர் இறந்து விட்டதாக நினைத்து அவரை 
துப்பட்டாவால் கழுத்தில் இறுக்கி தொங்கவிட்டுள்ளார். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை செய்த போது அவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானது தெரியவந்தது. அப்போது நடந்த விசாரணையில் சிக்கினார் அர்ஜூன். அவரை பிடித்து விசாரித்த போது கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை ஒப்புக் கொண்டார். சிறுமியின் பெற்றோர் தேயிலை தோட்ட வேலைக்கு சென்று விடுவதால் அதை பயன்படுத்தி அத்துமீறி வந்ததும் உறுதியானது. இணையத்தில் ஆபாச படங்களை பார்த்து வந்த அர்ஜூன், அதனால் ஏற்பட்ட தாக்கத்தில் சிறுமியிடம் இதுபோல் நடந்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பாக சிறுமியின் இறுதி சடங்கின் போது கூடவே இருந்து அத்தனையையும் செய்து கொடுப்பது போல நடித்துள்ளார் அர்ஜூன். தன் மீது சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக துக்க நிகழ்வில் முன்நின்று அனைத்து வேலைகளையும் பார்த்துள்ளார் அவர்... ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளி அர்ஜூன் தான் என்பது உறுதியானதை தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

24 views

பிற செய்திகள்

"டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை தேவை"- தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகம் மற்றும் புதுசேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் தீவிரம்: முகக்கவசம் இல்லையென்றால் அபராதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.

8 views

"புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு" - ஆட்சியர் கவிதா ராமு பேட்டி | Pudukkottai

புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்

21 views

மருத்துவரிடம் மோசடி கும்பல் கைவரிசை - வங்கி கணக்கில் இருந்து ரூ.2.40 லட்சம் அபேஸ்

சென்னையில் மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை நூதனமான முறையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

18 views

இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதியின் உருவப்படம் இன்று திறப்பு : விழாவில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர்

5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

32 views

தொடர்ந்து 10 மணி நேரம் கராத்தே பஞ்ச் - கராத்தே மாணவர்கள் சாதனை

உலக சாதனை முயற்சியாக தொடர்ந்து 10 மணி நேரம் பஞ்ச் செய்து திருமங்கலம் கராத்தே மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.