மத்திய அமைச்சரவை விரிவாக்கம் - வரும் வியாழன் அறிவிப்பு வெளியாகும்?
பதிவு : ஜூலை 06, 2021, 04:40 PM
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை விரிவாக்கம் வரும் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஹாரை சேர்ந்த பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகும் அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்சித் தலைமையுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு மத்திய அமைச்சரவையில் நான்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2 கேபினட் அமைச்சர் பதவிகளையும் 2 இணை அமைச்சர் பதவிகளையும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கேட்டு வருகிறது. பீகாரில் பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் 17 பேர் உள்ளனர். அவர்களில் ஐந்துபேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் 16 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் ஒருவர் கூட அமைச்சராக இல்லை. இதன் அடிப்படையில் தங்களுக்கு நான்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி கோரி வருகிறது. கேட்ட படி, அமைச்சர் பதவி ஒதுக்காவிட்டால், அமைச்சரவையில் பங்கேற்க போவதில்லை என அக்கட்சி முடிவு செய்துள்ளது. 

பிற செய்திகள்

"இளைஞர்களின் கனவு நாயகன்" அப்துல் கலாம் நினைவு தினம்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

0 views

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

31 views

காலம் போற்றும் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று... திறமைக்கு வசதி வாய்ப்பு ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த இளைஞர்களின் எழுச்சி நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

14 views

100 நாள் வேலைத் திட்டம் : "வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை" - மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி

மகாத்மா காந்தியின் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடவில்லை என மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

10 views

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டம் : வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்

தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில், காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக, எம்.பி. வைகோவின் கேள்விக்கு மத்திய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

19 views

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் தடை சட்டம் - மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர்

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் பழக்கம் குறித்து மக்களவை உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.