பாகிஸ்தானில் உலகக்கோப்பை - ஐசிசியிடம் கோரிக்கை
பதிவு : ஜூலை 06, 2021, 03:36 PM
பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர்களை நடத்த வேண்டும் என ஐசிசியிடம், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு வரை அனைத்து வடிவிலான ஐசிசி தொடர்களை நடத்தும் நாடுகள் எவை என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டன.அடுத்ததாக 2024 முதல் 2031 வரையிலான காலக்கட்டத்தில் ஐசிசி தொடர்களை நடத்தும் இடங்களை தேர்வு செய்யும் பணியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இறங்கியுள்ளது. 
இந்த காலக்கட்டத்தில் இரண்டு உலகக்கோப்பை, 2 சாம்பியன்ஸ் டிராபி, 2 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளன.இந்த நிலையில், 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு எந்த ஒரு ஐசிசி சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடத்தாமல் உள்ள பாகிஸ்தான், உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பைகளை நடத்த அனுமதி தருமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது.2008ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 2009ல் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரும் பாகிஸ்தானில் நடைபெறவில்லை.அமெரிக்கா, மலேசியா, ஓமன், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 17 உறுப்பு நாடுகள் ஐசிசி தொடர்களை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.ஏற்கனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மட்டுமே அதிக தொடர்களை நடத்துவதாக பல அணிகள் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன
கடைசி 3 உலகக்கோப்பை தொடர்களில் பெரும் பகுதி, இந்த 3 நாடுகளில் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், ஐசிசி தொடர்களை நடத்த மற்ற நாடுகளுக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன.



தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

249 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

200 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

மீராபாய் சானுவின் வெற்றிப் பயணம்- விறகு சுமந்தவர், பதக்கம் வென்ற வரலாறு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்துள்ளார் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு...

47 views

கனவு நிஜமாகி உள்ளது; தேசத்திற்கு பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன் - டுவிட்டரில் சானு நெகிழ்ச்சி

ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது கனவு நிஜமாகி உள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு கூறியுள்ளார்.

7 views

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - இந்திய வீராங்கனைகள் மனிகா, சுதிர்தா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மனிகா பத்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகிய இருவரும் 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

7 views

ஆடவர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.

5 views

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி : ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு - இறுதிப் போட்டியில் சவ்ரஃப் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சவ்ரஃப் சவ்தரி தோல்வி அடைந்தார்.

8 views

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி : இந்திய ஜோடி சாய்ராஜ் - சிரக் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.