ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பு - மேரி கோம், மன்பிரீத்திற்கு கொடி கவுரவம்
பதிவு : ஜூலை 06, 2021, 02:42 PM
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை மேரி கோம் மற்றும் மன்பிரீத் சிங் ஏந்திச் செல்லவுள்ளனர்...
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை மேரி கோம் மற்றும் மன்பிரீத் சிங் ஏந்திச் செல்லவுள்ளனர்... இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கடந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளி போனது.. இந்நிலையில், நீண்ட காத்திருப்புகளுக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 ஆம் தேதி தொடங்குகிறது... மொத்தம் 206 அணிகளுடன் சேர்த்து அகதிகள் அணி என பல நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த போட்டியில் களமிறங்க உள்ளனர்.
இந்தியா சார்பில் 63 வீரர்கள், 52 வீராங்கனைகள் என மொத்தம் 115 பேர் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது ஒவ்வொரு நாட்டின் அணி சார்பிலும் ஒருவர் மட்டுமே தேசியக் கொடி ஏந்தி செல்வது வழக்கம். 
ஆனால் இம்முறை இந்த வழக்கத்தை மாற்றி அமைத்துள்ளது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.... ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் ஒரு வீரர் மற்றும் ஒரு வீராங்கனை என இருவர் தேசிய கொடியை ஏந்தி செல்ல அனுமதி வழங்கியிருந்தது... இந்த அறிவிப்பின் படி, முதலாவதாக பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், இந்திய அணி சார்பில் தேசிய கொடியை ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமும், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கும் மூவர்ண கொடியை ஏந்தி செல்ல உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

215 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

187 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

113 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய வீரர்கள் அணிவகுப்பை பார்த்து ரசித்த பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.

10 views

மேரி கோம், மன்பிரீத் தலைமையில் இந்திய ஒலிம்பிக் அணியினர் அணிவகுப்பு

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்று இந்திய ஒலிம்பிக் அணியை வழிநடத்தினர்

65 views

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம் - இந்திய ஒலிம்பிக் அணியினர் அணிவகுப்பு

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் கோலாகலமாக தொடங்கி உள்ளன.

41 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா - இந்திய தரப்பில் சுமார் 30 பேர் கொண்ட குழு தொடக்க விழாவில் பங்கேற்பு

மேரி கோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினர்

14 views

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - ஜப்பான் விமானப் படையினர் சாகசம்

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி உள்ளன

8 views

ஜப்பானின் டோக்கியோ நகரில் கோலாகலமாக நடந்த ஒலிம்பிக் தொடக்க விழா

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி உள்ளன.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.