இறந்ததாக கூறப்பட்ட பிறந்த குழந்தை - அடக்கம் செய்ய போன இடத்தில் அதிர்ச்சி
பதிவு : ஜூலை 06, 2021, 11:00 AM
தேனி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்ததாக கூறப்பட்டு, உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த குழந்தையின் உடலில் அசைவு இல்லாததால்... அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி உடலை ஒப்படைத்த மருத்துவர்கள்.... அடக்கம் செய்ய சென்ற இடத்தில் கண் விழித்த குழந்தை.... இந்த அதிர்ச்சி சம்பவம் தேனி அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது... 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்தவர் பாத்திமா மேரி. ஆறு மாத கர்ப்பிணியான இவர், வயிற்றில் உள்ள பனிக் குடம் உடைந்த காரணத்தினால் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கவே... பிறந்த குழந்தையின் உடல் அசைவின்றி இருந்ததால்... குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்.... குழந்தை இறந்துவிட்டதாக கூறி... உடலை ஒப்படைத்துள்ளனர்... 

இதையடுத்து குழந்தையை அடக்கம் செய்ய எடுத்து சென்ற இடத்தில்... திடீரென்று கண் விழித்த குழந்தை... வாயை திறந்த நிலையில், கை கால்களை அசைத்து உள்ளது...

குழந்தை உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக குழந்தைக்கு செயற்கை சுவாச கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக 
விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேனி அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளார், மாவட்ட ஆட்சியர் முரளிதரன். மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

உயிரை காக்க வேண்டிய மருத்துவர்களே... தங்கள் அலட்சியத்தால் பிஞ்சி உயிரை காக்க தவறியது கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 

பிற செய்திகள்

சென்னையில் 2வது விமான நிலையம்? - விமான நிலைய விரிவாக்கப் பணி மும்முரம்

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாததால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

72 views

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

22 views

"மழை நீரை முழுமையாக சேமிக்க நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மழை காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து பயன்படுத்தும் வகையில், புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைத்திட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

15 views

"புதிய மாநகராட்சி, நகராட்சி விரைவில் அறிவிப்பு" - அமைச்சர் கே.என்.நேரு

புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்பட்டதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

35 views

"சென்னை, கரூரில் சொந்த வீடு இல்லை" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்....

30 views

மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.