"சாலை விபத்து - ஆண்டுக்கு1.5 லட்சம் பேர் பலி"
பதிவு : ஜூலை 06, 2021, 10:29 AM
நாட்டில் நிகழும் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 60 சதவீத பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிகழும் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 60 சதவீத பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.வாகன விபத்து ம​ற்​றும் பாதுகாப்பு பற்றிய காணொலி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய நிதின் கட்கரி,இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில் அதிகளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது என்றார்
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் ஒன்றரை லட்சம் பேர் இறப்பதாகவும், இது கொரோனா மரணங்களை விட அதிகம் என சுட்டிக்காட்டினார்.அதிலும், உயிரிழப்பவர்களில் 60 சதவீத பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என தெரிவித்த கட்கரி, இருசக்கர வாகன போக்குவரத்து பாதுகாப்பு தான் இப்போதைய தேவை என்றார்.மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் எந்த விபத்து மற்றும் இறப்புகள் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் தனது நோக்கம் என கூறிய அவர், உலகளவில் வாகன பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் சாலை பொறியியல் தொழில்நுட்பம் மிகப் பெரியளவில் மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அத்துடன், ஓட்டுநர்களுக்கான சிறந்த பயிற்சி, மேம்பட்ட பயிற்சி மையங்கள் ஆகியவை முக்கியம், நல்ல சாலைகளை உருவாக்கி, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது எனது தார்மீக பொறுப்பு என்றார்,நமது இலக்கை அடைய, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

247 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..

8 views

ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

6 views

இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சானு - வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவரது வெற்றியை சொந்த ஊரில் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.

21 views

இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் - பாதுகாப்புப் பணியில் போலீசார்

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

23 views

எஸ்.எஸ்.பி முனிராஜின் அடுத்த அதிரடி! - குற்றவாளிகளை துளைக்கும் தோட்டா !

ஐந்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட மருத்துவரை 24 மணி நேரத்தில் மீட்டது மட்டுமின்றி, துப்பாக்கி தோட்டாக்களால் அடுத்தடுத்து அதிரடி காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார், ஆக்ராவின் எஸ்.எஸ்.பி முனிராஜ்.....

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.