கூட்டுறவு சங்க வழக்கு முடித்து வைப்பு
பதிவு : ஜூலை 05, 2021, 10:59 PM
தமிழக அரசின் உத்தரவாதத்தை ஏற்று கூட்டுறவு சங்கங்களை கலைக்க தடை கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக அமைச்சர் பெரியசாமி,  தெரிவித்திருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் தற்போதைய கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைக்கப் போவதில்லை என தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.மேலும், முறைகேடுகளில் ஈடுபட்ட சங்கங்கள் மீது மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு  நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக‌ அரசு தெரிவித்தது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணகுமார்,வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.