சிவசங்கர் பாபா விவகாரம் - 5 பேருக்கு முன்ஜாமின்
பதிவு : ஜூலை 05, 2021, 10:29 PM
சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர், நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறியதாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கட்ராமன், பள்ளி நிர்வாகி  ஜானகி சினிவாசன், பக்தைகள்  கருணாம்பிகை, திவ்யா மற்றும் பாரதி ஆகியோர் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 
இந்த மனுக்கள்  நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அறிக்கையாக  காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.இதனை பதிவு செய்த நீதிபதி, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி  தொடர்பும் இல்லை என கூறி , ஐந்து பேருக்கும் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.அதன்படி, 2 வாரங்களுக்கு ஐந்து பேரும் சிபிசிஐடி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் தங்களுடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும்  நீதிபதி, நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

306 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

245 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

150 views

பிற செய்திகள்

ஆக்ரோஷமாக கொட்டித்தீர்த்த கனமழை - மிதக்கும் விவசாய நிலங்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

6 views

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

24 views

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

25 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

26 views

ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

32 views

டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.