கூடுதல் தளர்வுகள்-நீங்கிய கட்டுப்பாடுகள் : படிப்படியாக திரும்பும் இயல்பு நிலை
பதிவு : ஜூலை 05, 2021, 08:37 PM
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இரண்டாவது அலையில் இருந்து மீண்டு தனது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது, தமிழகம்.தமிழகம் முழுவதும் உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகளில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை உணவகங்களில் பார்சல் மூலம் மட்டும் உணவுகளை வாங்கி சென்ற மக்கள், உணவகங்களில் அமர்ந்து உணவு உண்டனர். இதைபோன்று தேநீர் கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது...  தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி,  நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைபோல் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்களும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட தொடங்கி உள்ளன. இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் ஆர்வமுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டன.  சுற்றுலா பயணிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இதுவரை தடையில் இருந்த மாவட்டங்களில் கடைகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து பல இடங்களில் கடை திறக்கும் முன்னே மதுப்பிரியர்கள் திரண்டனர். பிற செய்திகள்

கும்பாபிஷேகம் செய்யப்படாத கோவில்கள் "விரைவில் குடமுழுக்கு செய்யப்படும்" - அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களைத் தெரியாமல் கிரயம் செய்து வைத்திருந்தாலும் தவறுதான் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

7 views

வடிவேலு பட பாணியில் நிஜ சம்பவம் - நண்பனை அடகு வைத்துவிட்டு திருட்டு

வடிவேலு பட பாணியில் நண்பனை அடமானம் வைத்து விட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் நாமக்கல் அருகே அரங்கேறி இருக்கிறது....

10 views

ஆடி முதல் வெள்ளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

26 views

அதிமுக 28-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 28 ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்து உள்ளனர்.

22 views

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3208 views

புதிய துணைவேந்தர்கள் நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு

12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.