மத்திய அமைச்சரவை மாற்றம் - யார் யாருக்கு வாய்ப்பு ?
பதிவு : ஜூலை 05, 2021, 07:20 PM
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் இந்த வார இறுதிக்குள் நடைபெற இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சர்களாக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் சுரேஷ் அங்காடியின் மறைவு, உணவுத் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்தத் துறைகளின் பொறுப்பை இதர அமைச்சர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.ஒரு அமைச்சர் பல்வேறு துறைகளை கவனித்து வருவதால் அமைச்சர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.எனவே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அமைச்சர்களின் பணிச்சுமையை குறைப்பது, அடுத்தாண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழ்கிறது.
அதன்படி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
குறிப்பாக பீகார் துணை முதல்வராக இருந்த சுஷில் குமார் மோதி, அப்னா தள் கட்சியை சேர்ந்த அனுப்பிரியா பட்டேல்...அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால், மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாகவே அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களினால் அது தள்ளிப் போனது.இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வார இறுதிக்குள் நடைபெறும் என
தகவல்கள் வெளியாகியுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

மாநிலங்களவையில் கூச்சல் - மசோதாவை கிழித்து உறுப்பினர்கள் போராட்டம்

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

10 views

"பெகாசஸ் குறித்து விவாதம் வேண்டும்" - எதிர்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை முடக்கம்

மாநிலங்களவை தொடங்கியதும் விவசாய சட்டம், பெகாசஸ் குறித்து விவாதிக்க நேரம் கேட்டு எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது.

8 views

ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு மக்களவையில் வாழ்த்து

ஒலிம்பிக்கில் 2வது முறையாக வெண்கலம் வென்ற பிவி சிந்துவிற்கு வாழ்த்து தெரிவித்து தொடங்கிய மக்களவை எதிர்கட்சியினரின் அமளியால் முடங்கியது.

7 views

குழந்தைகள் இருந்தால் மாதம் ரூ.2000 - கேரள கிறிஸ்தவ சபை அறிவிப்பு

உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நான்கிற்கு மேல் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு மாதம் 2000 ரூபாய் வழப்படும் என கேரள கிறிஸ்தவ சபை அறிவித்துள்ளது.

10 views

"நாடாளுமன்ற முடக்கம் - மத்திய அரசே பொறுப்பு": மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர்

நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கினால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பாகும் என்று மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.

7 views

"கல்லெறிந்தால் பாஸ்போர்ட் கிடையாது" - இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்

ராணுவத்தினர் மீது கல்லெறிதல் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.