விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா - விண்வெளி நடைபயணத்தை முடித்த வீரர்கள்
பதிவு : ஜூலை 05, 2021, 06:51 PM
விண்வெளியில், சீனா உருவாக்கி வரும் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகள் பற்றி தற்போது பார்க்கலாம்...
பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விண்வெளி நிலையத்தை சீனா உருவாக்கி வருகிறது. இதன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள மூன்று விண்வெளி வீரர்கள், டியான்ஹெ பெட்டகத்தில் தங்கியுள்ளனர்.ட்ரெட் மில் மற்றும் இதர உபகரணங்கள் மூலம் இவர்கள் மூவரும் உடற்பயிற்சி செய்து, தங்களின் உடல நலத்தை பேணி வருகின்றனர். டியான்ஹு பெட்டகத்தில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கேமிரா மூலம் பூமியை படம் எடுத்துள்ளனர். மேகங்கள் சூழ்ந்த கடற் பரப்பு பகுதிகள் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து மிக அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.ஸ்பேஸ் சூட் எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்த வீரர்கள்,  டியான்ஹு பெட்டகத்தில் இருந்து வெளியேறி, விண்வெளியில், கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர். மிக அபாயகரமான இந்த பணிகளில் பல மணி நேரங்கள் ஈடுபட்டு, டியாங்காங் விண்வெளி நிலையத்தின் உருவாக்கத்திற்கான முதல் கட்டப் பணிகளை மேற்கொண்டனர்.மிக பிரமாண்டமான, அதி நவீன இயந்திர கை ஒன்றை, இந்த பணிகளுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த இயந்திரக் கையில் பொருத்தப்பட்டுள்ள துல்லியமான கேமிராக்கள் மூலம் அனைத்து செயல்பாடுகளும் கணிக்காணிக்கப்பட்டு, துல்லியமாக செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.விண்வெளியில் முதற்கட்ட நடைபயணம் நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட பணிக்கு சீன வீரர்கள் தயாராகி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

ஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.

14 views

அமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.

9 views

சீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...

சீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.

13 views

கொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை

கொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.

8 views

சர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.