அமெரிக்காவில் பரவும் டெல்டா வைரஸ் - புதிய தொற்றுதல்களில் 40%ஆக அதிகரிப்பு
பதிவு : ஜூலை 05, 2021, 05:10 PM
அமெரிக்காவில் டெல்டா ரக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
உலக அளவில் கொரோனா நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் தொடர்கிறது. இதுவரை அங்கு 6.21 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தினசரி கொரோனா பரவல் அளவு அங்கு வெகுவாக குறைந்து தற்போது சுமார் 12,500ஆக உள்ளது. ஆனால் சமீப நாட்களில் தினசரி தொற்றுதல்கள் எண்ணிக்கை சிறிய அளவில் அதிகரித்து வருகிறது.அமெரிக்கா, கொரோனா தொற்றுதல், டெல்டா ரகம், முகக்கவசம், தடுப்பூசிகள், பொது மக்கள் அமெரிக்காவில் தினசரி தொற்றுதல்களில், டெல்டா ரக உருமாறிய கொரோனா வைரஸின் விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.புதிய தொற்றுதல்களில் சுமார் 40 சதவீதம் வரை டெல்டா ரக கொரோனா வைரஸினால் ஏற்படுவதாக ஜீனோம் சோதனை நிறுவனமான ஹெலிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.மாடெர்னா, பைசர், ஜான்சன் அன்ட் ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஸெனிகா நிறுவனங்களின் தடுப்பூசிகள், டெல்டா ரக வைரஸ் தொற்றுதலுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.அமெரிக்காவில் இதுவரை 47.4 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 54.9 சதவீதத்தினருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் அளிக்கப்பட்டுள்ளன.  தடுப்பூசிகளுக்கு பற்றாகுறை இல்லாத நிலை தொடர்ந்தாலும், தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு பலரும் அங்கும் தயங்குவதால், தடுப்பூசி விநியோகம் மந்தமான நிலையில் தொடர்கிறது.தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு, அதிக வேகத்தில் பரவும் திறன் கொண்ட டெல்டா ரக வைரஸ் தொற்றுதல் ஏற்பட்டு, அதன் மூலம் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பது பற்றியும் அமெரிக்காவில் குழப்பம் நீடிக்கிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என்று அமெரிக்க நோய்கள் கட்டுபாடு மையம் அறிவித்துள்ளது. ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்துள்ளன. தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

7 views

சீனாவில் புதிதாக 98 பேருக்கு கொரோனா - 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு

சீனாவில் புதிதாக 98 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

12 views

ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று அதிகரிப்பு - புதிதாக 17 பேருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

6 views

5-வது நாளாக தொடரும் காட்டு தீ - பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் வெளியேற்றம்

துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த‌து.

15 views

சீனா ராணுவம் துவங்கிய 94 ஆம் ஆண்டு - போர் ஒத்திகையில் ஈடுபட்ட கப்பற்படை

சீன போர்க் கப்பல் தனது படை பலத்தை உறுதிசெய்யும் விதமாக ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

9 views

இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.