இறந்ததாகக் கூறப்பட்டு உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பதிவு : ஜூலை 05, 2021, 03:36 PM
தேனியில் இறந்ததாகக் கூறப்பட்டு உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
தேனியில் இறந்ததாகக் கூறப்பட்டு உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 

தேனி மாவட்டம் தென்கரை தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பாத்திமா மேரி என்பவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு கடந்த சனிக்கிழமை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை உடல் அசைவின்றி இருந்த காரணத்தால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாகக் கூறி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். பெற்றோரும் உறவினர்களும் குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்த போது, குழந்தையின் கை கால்கள் அசைவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பச்சிளங்குழந்தை சேர்க்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

297 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

53 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

"7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 views

தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

3 views

பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 views

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

27 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

12 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.