அன்று கல்பனா சாவ்லா.. இன்று சிரிஷா... விண்வெளிக்கு பறக்கும் 2வது இந்திய பெண்
பதிவு : ஜூலை 05, 2021, 03:29 PM
விண்வெளிக்கு பறக்கும் இரண்டாவது இந்திய பெண்மணி என்ற சாதனையை சிரிஷா பண்ட்லா படைக்க உள்ளார். அவரது சாகச பயணம் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விண்வெளிக்கு பறக்கும் இரண்டாவது இந்திய பெண்மணி என்ற சாதனையை சிரிஷா பண்ட்லா படைக்க உள்ளார். அவரது சாகச பயணம் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


இந்தியாவின் மூளை முடுக்கெங்கும் சென்று சேர்ந்த சாதனை பெயர்..

இந்தியாவில் பிறந்து விண்வெளியில் தடம் பதித்த வீரமங்கை என உலக அரங்கில் பெயர் பெற்றார். அதோடு பல கோடி இளம்பெண்களின் முன்மாதிரியானார் கல்பனா சாவ்லா.

அவரது சாதனையின் தொடர்ச்சியாக இந்தியாவை பெருமைப்படுத்த தயாராகியுள்ளார், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த சிரிஷா பண்ட்லா..

அமெரிக்கா - இங்கிலாந்தை மையமாக வைத்து இயங்கும் VIRGIN GALACTIC என்ற நிறுவனம் ஜூன் 2ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்வெளிக்கு பறக்கும் இரண்டாவது இந்திய பெண்மணி என்ற சாதனையை படைக்க உள்ளார் சிரிஷா..

VIRGIN GALACTIC நிறுவனரான ரிச்சர்ட் பிரான்சன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஜூலை 11ஆம் தேதி விண்வெளிக்கு புறப்படுகின்றனர்.

இதில் இடம்பெற்றுள்ள சிரிஷா பண்ட்லாவின், 4வது வயதிலேயே அவரது குடும்பம் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தது. அங்கேயே ஏரோநாடிக்ஸில் பட்டம்பெற்ற அவர், VIRGIN GALACTIC நிறுவனத்தின் உயர் பதவிக்கு சென்றுள்ளார்.

நாசாவில் பணிபுரிவதே லட்சியம் என்றிருந்த நிலையில், பார்வைத்திறன் குறைபாட்டால் அந்த வாய்ப்பு நழுவியதாக கூறும் சிரிஷா, அதனை ஒதுக்கி வைத்து VIRGIN GALACTIC நிறுவனத்தில் இணைந்தார். படிப்படியாக நிறுவனத்தின் முக்கிய பதவியை எட்டிய சிரிஷா, தற்போது VIRGIN GALACTIC நிறுவனருடன் விண்வெளிக்கே பறக்க தயாராகிவிட்டார்.

நாசா என்ற லட்சியம் கைகூடாவிட்டாலும், தீவிர முயற்சியால் தனது இலக்கை எட்ட ஆயத்தமாகிவிட்ட சிரிஷா, லட்சியத்தை நோக்கி பயணிக்கும் பல பெண்களுக்கு முன்மாதிரியாக மிளிர்கிறார்..

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

300 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

241 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

149 views

பிற செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு - வீடுகள் மீது விழுந்த பாறைகள்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

9 views

சமாஜ்வாடி- ஓவைசி கட்சி கூட்டணி விவகாரம் : முஸ்லிமுக்கு துணைமுதல்வர் பதவி கேட்கவில்லை - மஜ்லிஸ் கட்சி

இஸ்லாமியரை துணை முதல்வராக்குவதாக உறுதியளித்தால், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியாகும் செய்தி தவறானது என, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

13 views

நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்

நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்

11 views

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

14 views

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

37 views

தடுப்பூசி எங்கே ராகுல்காந்தி கேள்வி"மக்கள் மனதை மோடி புரிந்து கொள்ளவில்லை...

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மந்தமாக நடைபெற்று வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.