பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசிய தாய் - ஃபேஸ்புக் காதல் மோகம் - விபரீத முடிவு
பதிவு : ஜூலை 04, 2021, 12:34 PM
பேஸ்புக் மூலம், உறவுகார பெண்ணிடம் காதலிப்பதாக கூறி பிராங்க் செய்ததால், பச்சிளம் சிசு மற்றும் இரண்டு இளம் பெண்கள் உயிரிழக்க நேர்ந்த சம்பவம், கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள், போலீசாரிடம் சிக்கியது எப்படி என விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....
கேரளாவில் மாநிலம் கொல்லம் அருகே கல்லுவாதுக்கல் பகுதியில், கடந்த ஜனவரி மாதம் தோட்டத்தில் குவித்து வைத்திருந்த  குப்பைக்கு இடையே, பிறந்து இரு நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.  அந்த குழந்தையின் தாய் யார் என போலீஸ் விசாரணை தொடங்கிய நிலையில்,  அருகே வசித்து வரும் ரேஷ்மா என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். கணவர் மற்றும் குடும்பத்தோடு வசித்து வரும் ரேஷ்மா, குடும்பத்தினருக்கு தெரியாமல், குழந்தையை வீசியது தெரியவந்தது. அதை தொடர்ந்து ரேஷ்மாவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் படி, ரேஷ்மா கணவரின் சகோதரனின் மனைவி ஆர்யா மற்றும் கணவரின் சகோதரியின் மகள் கிரீஷ்மா ஆகியோரிடம் கூறியிருந்தனர்.  இதற்கிடையே, இருவரும் திடீரென வீட்டிலிருந்து மாயமாகினர்.  அவர்களை  குடும்பத்தினரும் போலீசாரும்  தேடி வந்த நிலையில், சனிக்கிழமையன்று  அப்பகுதியில் உள்ள குளத்திலிருந்து இருவரையும் சடலங்களாக மீட்டனர்.  அதிர்ச்சியடைந்த போலீசார், குழந்தை இறப்பின் பின்னணியில் வேறு ஏதோ இருக்கிறது என தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். அப்போது, உறவுக்கார பெண்ணான கிரீஷ்மா, பிராங்க் செய்வதற்காக,  பேஸ்புக் மூலம், ரேஷ்மாவிடம் ஆனந்த் என ஆண் நண்பர் பெயரில் பழகியுள்ளனர். ரேஷ்மாவை காதலிப்பதாக நெருங்கி பழகியுள்ளனர். குழந்தை இருந்தால் எப்படி திருமணம் செய்துக்கொள்ள முடியும், அதனால் குழந்தை கொன்று விடு என கூறியுள்ளார்.
 இதை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்ட ரேஷ்மா, தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. கூட்டாக சேர்ந்து பிராங்க் செய்ததால், போலீஸ் விசாரணையில் மாட்டிக்கொள்வோம் என பயந்து, ஆரியாவும், கிரீஷ்மாவும் தற்கொலை செய்துக்கொண்டதும்  விசாரணையில் தெரியவந்தது. சமூக ஊடகத்தில் போலி கணக்கு தொடங்கி ஒருவரை ஏமாற்ற நடத்திய விளையாட்டு, வினையாகி உயிர்களை பலி கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
----------------------

பிற செய்திகள்

இமாச்சலில், ஆகஸ்ட்-2.ல் பள்ளிகள் திறப்பு - 10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

இமாச்சல் பிரதேசத்தில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

6 views

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தபேருந்து - சாமார்த்தியமாக ஓரமாக நிறுத்திய ஓட்டுநர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

9 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

18 views

ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்

காஸ்மீர் எல்லைப் பகுதியில், வெடிப் பொருட்களை ஏற்றி பறந்து வந்த ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

9 views

"தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம்" - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நீதிமன்ற காவலை, வரும் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது, மும்பை நீதிமன்றம்...

11 views

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய வீரர்கள் அணிவகுப்பை பார்த்து ரசித்த பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.