கொரோனா முதல் அலையும், 2ம் அலையும் - பாதிப்பும், முழு ஊரடங்கு காலமும்...
பதிவு : ஜூலை 04, 2021, 05:50 AM
கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வரும் சூழலில், முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது ஊரடங்கு காலம் எவ்வளவு நாட்கள் இருந்தது என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்...
கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வரும் சூழலில், முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் போது ஊரடங்கு காலம் எவ்வளவு நாட்கள் இருந்தது என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்...

கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டது என்ற செய்தி வெளியானது தொடங்கி இன்று வரை பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.. 

தமிழகத்தில் முதன்முதலாக 2020 மார்ச் 7ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது..

தொற்று பரவலை அடுத்து மார்ச் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கை அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

தொடர்ந்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தார்

முதல் அலையில் அதிகபட்சமாக ஜூலை 27-ஆம் தேதி 6,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தன.

2020 செப்டம்பர் ஒன்றாம் தேதி தினசரி பாதிப்பு 5928ஆக இருந்த போது, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.


சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் பிரசாரம் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடக்க, மறுபக்கம் கொரோனா பரவலும் வேகமெடுத்தது..

மார்ச் மாதத்தில் உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று பரவ ஆரம்பிக்க, ஏப்ரலில் பாதிப்பு 18 ஆயிரத்தை கடந்தது

இதனால் ஏப்ரல் 20 முதல் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது

 
இரண்டாவது அலையில் தற்போது வரை அதிகபட்ச தினசரி பாதிப்பாக மே 21ஆம் தேதி 36,184 ஆக பதிவானது.

முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் மே 10ம் தேதி முதல் சிறு தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இருப்பினும் தொற்று குறையாததால், மே 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது தமிழகத்தின் தினசரி பாதிப்பு 34,867

தளர்வுகளற்ற ஊரடங்கால் ஜூலை தொடக்கத்தில் 4500க்கு கீழ் தொற்று குறைந்துவிட்ட நிலையில், 5ம் தேதி முதல் பொது போக்குவரத்து உட்பட பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு..

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் அலையில் 160 நாட்களும், இரண்டாம் அலையில் 76 நாட்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன..

அனைவரும் தடுப்பூசி போடும் பட்சத்தில் அடுத்த அலைகளை மிக எளிதாக கடந்துவிடலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

284 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

39 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

29 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

23 views

பிற செய்திகள்

ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் தீவிரம்: முகக்கவசம் இல்லையென்றால் அபராதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.

7 views

"புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு" - ஆட்சியர் கவிதா ராமு பேட்டி | Pudukkottai

புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்

16 views

மருத்துவரிடம் மோசடி கும்பல் கைவரிசை - வங்கி கணக்கில் இருந்து ரூ.2.40 லட்சம் அபேஸ்

சென்னையில் மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை நூதனமான முறையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

16 views

இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதியின் உருவப்படம் இன்று திறப்பு : விழாவில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர்

5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

28 views

தொடர்ந்து 10 மணி நேரம் கராத்தே பஞ்ச் - கராத்தே மாணவர்கள் சாதனை

உலக சாதனை முயற்சியாக தொடர்ந்து 10 மணி நேரம் பஞ்ச் செய்து திருமங்கலம் கராத்தே மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

8 views

சட்டமன்ற நூற்றாண்டு விழா - நடிகர் ரஜினிக்கு சிறப்பு அழைப்பு என தகவல்

சட்டமன்ற நூற்றாண்டு விழா, கருணாநிதி படம் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தலைமைச்செயலகத்தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.