அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி விவாகரத்து... முடிவுக்கு வந்த 15 ஆண்டு கால இல்வாழ்க்கை
பதிவு : ஜூலை 04, 2021, 01:19 AM
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி விவாகரத்து செய்துள்ளனர். 15 ஆண்டு கால வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக இருவரும் அறிவித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி விவாகரத்து செய்துள்ளனர். 15 ஆண்டு கால வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக இருவரும் அறிவித்துள்ளனர். 

பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் அமீர் கான்.. காதல் படமோ, நல்ல கதையம்சம் கொண்ட படமோ, எதுவாயினும் நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர் அமீர். லகான் படத்தின் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் ரசிகர்களிடம் சென்று சேர்ந்த அமீர் கான், அந்த படத்தின் மூலமே தனது வாழ்க்கை துணையையும் தேர்ந்தெடுத்தார். 

லகான் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவை காதலித்து மணமுடித்தார் அமீர். 15 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து வந்த ஜோடி, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்வதாக அறிவித்து பாலிவுட் உலகில் பேசுபொருளாகிவிட்டனர்..

15 ஆண்டுகள்... மகிழ்ச்சியை பகிர்ந்தும், நம்பிக்கையுடனும் அழகிய வாழ்க்கையை வாழ்ந்தோம்.. இருவரது சொந்த வாழ்க்கையை கருத்தில் கொண்டு பிரிகிறோம். எனினும் தங்களது மகனுக்காக பெற்றோராக இணைந்திருப்போம் என நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் அமீர் கான் - கிரண் ராவ் ஜோடி...

1986ஆம் ஆண்டு ரீனா தட்டாவை மணமுடித்த அமீர் கானுக்கு மகன், மகள் பிறந்த நிலையில் 2002ஆம் ஆண்டு விவாகரத்துக்கு பின் தாயுடன் குழந்தைகள் சென்றனர். பின்னர் கிரண் ராவை காதலித்து மணமுடித்த அமீர்கான், 15 ஆண்டு இல்வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே விவாகரத்து செய்ய இருவரும் ஆலோசித்திருந்ததாகவும், அதற்கான நேரம் வந்துவிட்டது என கருதிய பின் இறுதி முடிவை எடுத்துள்ளதாக கூறி குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் அமீர்கான் - கிரண் ராவ் ஜோடி..

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

கவனம் ஈர்க்கும் சார்பட்டா திரைப்படம் - சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசு

சார்பட்டா - உண்மை கதையை உயிரோட்டத்தோடு பேசியுள்ள படம் என்கின்றனர் சினிமா பார்வையாளர்கள். வடசென்னையும், சார்பட்டா வரலாறும் என்ன? பார்க்கலாம்.

346 views

4ம் திருமணம் செய்துகொண்டாரா வனிதா..? - பவர்ஸ்டார் சீனிவாசனின் விளக்கம் என்ன..?

பவர்ஸ்டார் - வனிதா விஜயகுமார் திருமணமா? சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படத்தின் பின்னணி என்ன?

121 views

நடிகர் சூர்யா பிறந்த தினம் - சரவணனை சூர்யாவாக்கிய தமிழ் சினிமா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

56 views

சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்... நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை ஏற்பு

சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்... நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை ஏற்பு

51 views

கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னி லீயோன்

பாலிவுட் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்க்கு ஜோடியாக நடிக்கிறார் சன்னி லியோன்.

121 views

பவர் ஸ்டார் சீனிவாசனுடன் திருமணம்..? - பரபரப்பை ஏற்படுத்திய வனிதா விஜயகுமார்

பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் நடிகை வனிதா விஜயகுமார் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.