அக்காவை கர்ப்பமாக்கிய தம்பி - ஆபாச படம் பார்த்துவிட்டு அத்துமீறல்
பதிவு : ஜூலை 04, 2021, 01:13 AM
கன்னியாகுமரியில் தன் உடன்பிறந்த சகோதரியை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரியில் தன் உடன்பிறந்த சகோதரியை கர்ப்பமாக்கிய 16 வயது சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

இதில் அந்த சிறுவன் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரையும் பிள்ளைகளையும் வீட்டில் விட்டு விட்டு தாய் வேலைக்கு  சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். 

சம்பவத்தன்று வீடு திரும்பிய தாயிடம் தனக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக கூறி கதறி அழுதுள்ளார் மகள். உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 

அப்போது போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில் மகனுக்கு செல்போன் ஒன்றை தாய் வாங்கி  கொடுத்துள்ளார். இணையத்தில் உலா வந்த சிறுவனுக்கு படிப்பை தாண்டி ஆபாச படங்களின் பக்கம் கவனம் திரும்பி உள்ளது. எப்போதும் ஆபாச படங்களை பார்த்து வந்த சிறுவன், கடைசியில் தன்  சகோதரியிடம் அத்துமீறியிருக்கிறார். 

இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். தினம் தினம் ஏராளமான வீடியோக்களை பார்க்கும் தன் தம்பி தொடர்ந்து தன்னிடம் அத்துமீறியதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அவர்... இதையடுத்து சிறுவனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் ஏராளமான ஆபாச படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். 8 மாத கர்ப்பிணியான சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிள்ளைகளின் கையில் இருக்கும் இந்த செல்போன் என்னென்ன கொடூரங்களை எல்லாம் பார்க்க வைக்கப் போகிறதோ? என்ற அச்சம் தான் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது... 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

122 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

72 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

30 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.

13 views

தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

11 views

ஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

26 views

குப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23 views

சங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.