உத்தராகண்ட் முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி - நாளை மாலை பதவியேற்பு விழா
பதிவு : ஜூலை 03, 2021, 07:06 PM
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமி நாளை மாலை 5 மணிக்கு பதவியேற்கவுள்ளார்
உத்தரகாண்டில் உள்ள பாரி கார்வல் மக்களவை தொகுதிய எம்.பி யாக  இருந்த தீரத் சிங் ராவத் மார்ச் 10 ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவி ஏற்றார்.அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாததால் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருந்தது,. இந்தநிலையில் கோரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதிலும் தொடர்ந்து காலதாமதம் நீடித்து வந்தது. அதேபோல் உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. வழக்கமாக ஒரு மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஓராண்டுக்குள் நிறைவடைவதாக இருந்தால் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது. எனவே இதுபோன்ற சூழலில் தீரத் சிங் ராவத் தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியாது என்பதால் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து ஆலோசித்த பிறகு நேற்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதனைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்ய டேராடூனில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் கூடியது,. அதில் கட்டிமா  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் புஷ்கர் சிங் தாமி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,. அவரது பதவியேற்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

303 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

245 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

150 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

15 views

தடுப்பூசி எங்கே ராகுல்காந்தி கேள்வி"மக்கள் மனதை மோடி புரிந்து கொள்ளவில்லை...

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது மந்தமாக நடைபெற்று வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

12 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

24 views

எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமானத்திற்கு அதிகமாக 55 % சொத்துக்கள் - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எப்.ஐ.ஆர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீத சொத்துக்களை குவித்துள்ளார் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது.

10 views

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 81ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

12 views

அதிமுக அரசு தரமற்ற முகக்கவசம் வழங்கியது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

கடந்த அதிமுக ஆட்சியில் நாடாத்துணியில் தரமற்ற முகக்கவசம் வழங்கியதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.