சென்னை ஐஐடி-ல் முற்பட்ட வகுப்பினர் ஆதிக்கம் - ஆர்.டி.ஐ. மூலம் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
பதிவு : ஜூலை 03, 2021, 03:19 PM
சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக புகார் தெரிவித்த, உதவி பேராசிரியர் தனது பணியைவிட்டு வெளியேறிய நிலையில், அங்குள்ள பணிகளில் முன்னேறிய வகுப்பினரே அதிக அளவில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ., மூலம் அம்பலமாகி உள்ளது.
சென்னை ஐஐடி சமூகவியல் துறையில் உதவிப்பேராசியராக பணியாற்றி வந்த விபின், அந்த கல்வி நிறுவனத்தில் சாதி பாகுபாடு இருப்பதாக புகார் தெரிவித்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னை ஐஐடியில் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் முன்னேறிய வகுப்பினர் மட்டும் அதிகளவில் நியமனம் செய்யப்படுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் ஐ.ஐ.டி. இயங்குவதும் தான்  இந்த பிரச்சினைக்கு காரணம் என்பது இதர சமூகத்தின் குற்றச்சாட்டு.
இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. தாழ்த்தப்பட்டோருக்கான 47 பணியிடங்களில் 5 பேர், பழங்குடியினருக்கான 23 பணியிடங்களில் ஒருவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 84 பணியிடங்களில் 29 பேர் மட்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓ.சி. பிரிவினருக்கு 154 பணியிடங்கள் ஒதுக்கீடு என்ற நிலையில், அதற்கு அதிகமாக அந்த பிரிவினர் 273 பேர் பதவி வகிப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது. 
இணை பேராசிரியர் நியமனத்திலும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான 27 பணியிடங்களில் 4 பேர், பழங்குடியினருக்கான 13 பணியிடங்களில் ஒருவர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 49 பணியிடங்களில் 19 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால், இணை பேராசிரியர் நியமனத்திலும் ஒ.சி. பிரிவினருக்கு 90 பணியிடங்கள் என ஒதுக்கீடு இருக்கும் நிலையில், 156 பணியில் இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உதவி பேராசிரியர் பணியிலும் ஏறக்குறைய 23 இடங்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் காலியாக உள்ளது. பழங்குடியினருக்கான15 பணியிடங்களில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருப்பினருக்கான 53 பணியிடங்களில் வெறும் 18 பேர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உதவி பேராசிரியர் பணியில் 98 பணியிடங்கள் மட்டுமே முன்னேறிய வகுப்பினருக்கு ஒதுக்கீடு என்ற நிலையில், 170 பேர் தற்போது பதவி வகிக்கின்றனர்.சென்னை ஐ.ஐ.டி-யில் மொத்தம் உள்ள பதவிகளில், ஓ.சி. பிரிவினர் 599 பேர், அதாவது 87 விழுக்காடு பதவிகளை ஆக்கிரமித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஓ.பி.சி. பிரிவினர் 10 விழுக்காடு, பழங்குடியினர் பிரிவினர் புள்ளி 4 விழுக்காடு, ஆதிதிராவிடர் பிரிவினர் 2 விழுக்காடு மட்டுமே நியமனம் பெற்றுள்ளனர். 2020ஆம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, உதவி பேராசிரியர் நிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவில் மூன்று பேர், பழங்குடியினர் பிரிவில் ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பதினோரு பேர், முன்னேறிய பிரிவினரில் 124 பேர் பணிபுரிந்து வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இணைப் பேராசிரியராக, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 5 பேர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 13 பேர், முன்னேறிய சமூகத்தில் 123 பேர் பதவியில் உள்ளனர். பேராசிரியர் நிலையில், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 7 பேர், பழங்குடியினர் பிரிவில் ஒருவர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 37 பேர் மற்றும் முன்னேறிய வகுப்பினர் பிரிவில் 268 பேர் பணிபுரிந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவன பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததும், ஒரு பிரிவினரின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதும் சாதி பாகுபாடு பிரச்சினைக்கு காரணம் என உதவி பேராசிரியராக பணியாற்றிய விபின் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்தி விசாரிக்க வேண்டும் என விபின் கோரிக்கை விடுத்ததை செய்தால் மட்டுமே புகாரின் உண்மைத் தன்மையை உணர்ந்து அதற்கான தீர்வை எட்ட முடியும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

284 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

39 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

29 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

23 views

பிற செய்திகள்

"டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை தேவை"- தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகம் மற்றும் புதுசேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் தீவிரம்: முகக்கவசம் இல்லையென்றால் அபராதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.

7 views

"புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு" - ஆட்சியர் கவிதா ராமு பேட்டி | Pudukkottai

புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்

16 views

மருத்துவரிடம் மோசடி கும்பல் கைவரிசை - வங்கி கணக்கில் இருந்து ரூ.2.40 லட்சம் அபேஸ்

சென்னையில் மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை நூதனமான முறையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

17 views

இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதியின் உருவப்படம் இன்று திறப்பு : விழாவில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர்

5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

32 views

தொடர்ந்து 10 மணி நேரம் கராத்தே பஞ்ச் - கராத்தே மாணவர்கள் சாதனை

உலக சாதனை முயற்சியாக தொடர்ந்து 10 மணி நேரம் பஞ்ச் செய்து திருமங்கலம் கராத்தே மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.