ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி - தொடர்ந்து 10 ஆண்டுகளாக பதவியில் நீட்டிப்பு
பதிவு : ஜூலை 03, 2021, 01:06 PM
தொடர்ந்து10 ஆண்டுகளாக சென்னை ஐஐடி இயக்குநராகப் பதவி வகித்து வரும், பாஸ்கர் ராமமூர்த்தியின் பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் முடிவடையவுள்ள நிலையில், 3வது முறையும் அவர் முயற்சிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐஐடியின் இயக்குனராக பாஸ்கர் ராமமூர்த்தி பதவி வகித்து வருகிறார் . 2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இயக்குனர் பதவி வகித்து வரும் அவரது பதவிக்காலம் வருகின்ற செப்டம்பருடன் முடிவடைகிறது. ஐஐடியில் படித்து, அதே நிறுவனத்தில் ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, இயக்குனராகப் பதவி உயர்வு பெற்றார் இவர். இந்நிலையில் மூன்றாவது முறையாகவும் 5 ஆண்டுகளுக்கு பதவியில் தொடர பாஸ்கர் ராமமூர்த்தி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடைய பதவிக் காலத்தில்தான் ஐஐடியில், சாதி, மத வேறுபாடுகள், மற்றும் தீண்டாமை போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.