அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி - ரூ.25000 மோசடி செய்த ஒருவர் கைது
பதிவு : ஜூலை 03, 2021, 11:06 AM
அரசு செவிலியர் பணி வாங்கி தருவதாக 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த திருக்கனூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி ஆயி, தனியார் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராக உள்ளார். இவரை தொலைபேசி மூலம் அழைத்த மர்மநபர் தன்பெயர் ராஜீவ்காந்தி என்றும் தமிழகத்தில் மண்டல அதிகாரியாக செயல்படுவதாகவும் கூறி அறிமுகம் செய்துள்ளார். பின்னர், மருத்துவமனைகளில் செவிலியர்கள் தேவை எனக்கூறியுள்ளார். அதில், தனது தம்பி மனைவிக்கு முதலில் வேலை வாங்கித் தாருங்கள் என கோரியுள்ளார். இதற்காக, வங்கிக் கணக்கு மூலம், 25 ஆயிரம் ரூபாய் வழ​ங்கிய நிலையில், அவர் தலைமறைவானார். புகாரின் பேரில் ​திருவண்ணாமலையை சேர்ந்த ராஜீவ்காந்தி பெரியகொலப்படி-யில் பதுங்கி இருந்தபோது சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் வேறு யாரிடமாவது பணமோசடி செய்துள்ளாரா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தபேருந்து - சாமார்த்தியமாக ஓரமாக நிறுத்திய ஓட்டுநர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

7 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

17 views

ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்

காஸ்மீர் எல்லைப் பகுதியில், வெடிப் பொருட்களை ஏற்றி பறந்து வந்த ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

9 views

"தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம்" - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நீதிமன்ற காவலை, வரும் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது, மும்பை நீதிமன்றம்...

11 views

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய வீரர்கள் அணிவகுப்பை பார்த்து ரசித்த பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.

12 views

"நீட் தேர்வு ரத்து செய்யப்படாது" - மத்திய அரசு

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என மக்களவையில் மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.