"மாநிலங்களவை இடைத் தேர்தலுக்கு தயார்" - விரைவில் மாநிலங்களவை தேர்தலுக்கு வாய்ப்பு
பதிவு : ஜூலை 03, 2021, 09:06 AM
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு தயார் என தமிழகம், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளன.
"மாநிலங்களவை இடைத் தேர்தலுக்கு தயார்" - விரைவில் மாநிலங்களவை தேர்தலுக்கு வாய்ப்பு

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு தயார் என தமிழகம், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ளன. தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளன. அதிமுக உறுப்பினர் முஹம்மது ஜான் மரணமடைந்ததை தொடர்ந்தும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்தும் 3 இடங்கள் காலியாக உள்ளன.  தமிழகம் தவிர மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 8 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா காலம் என்பதால் மேற்கண்ட மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டு இருந்தது. தற்போதைய சூழலில் தேர்தலுக்கு தயாராக இல்லை என மகாராஷ்டிர அரசு பதிலளித்துள்ளது.  இருப்பினும் தமிழகம்,  மேற்கு வங்கம் , அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் இடைத்தேர்தல் நடத்த தயார் என தேர்தல் ஆணையத்துக்கு பதில் அனுப்பி உள்ளன.இதனைத் தொடர்ந்து   தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

223 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

189 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

120 views

பிற செய்திகள்

முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்தித்துள்ளார்.

14 views

அதிமுக 28-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 28 ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்து உள்ளனர்.

21 views

நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை - தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பதில்

கொரோனா தொற்றை காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

46 views

மத்திய செயலக திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி

மத்திய செயலக திட்டம் குறித்து மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விரிவான பதிலளித்துள்ளார்.

19 views

ஜெயலலிதா சசிகலா நட்பு மலர்ந்தது எப்படி?

ஜெயலலிதாவுடன் நட்பு மலர்ந்தது குறித்து சசிகலாவும், அதுதொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவும் அளித்த பதிலையும் பார்க்கலாம்

88 views

ஜெயலலிதா, ஜானகி அணிகள் இணைப்பு - நடந்தது என்ன?

ஜெயலலிதா, ஜானகி அணி இணைப்பு குறித்து சசிகலா, இனியன் சம்பத் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.