அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்திற்கு அனுமதி - தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு
பதிவு : ஜூலை 03, 2021, 03:12 AM
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் வரும் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் வரும் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் வரும் 5 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் செயல்படும் நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்றும், வணிக வளாகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, அனைத்து வகையான துணி மற்றும் நகை கடைகளும் செயல்படலாம் என தெரிவித்து உள்ளது. இதேபோல் அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிடலாம் என தெரிவித்துள்ள தமிழக அரசு, ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இதேபோல் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்படவும், ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், அரசு பயிற்சி மையங்கள் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் மட்டும் செயல்படலாம் என தெரிவித்து உள்ள தமிழக அரசு, பொழுது போக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

122 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

72 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

30 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

மக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.

13 views

தமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

11 views

ஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

27 views

குப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

23 views

சங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

18 views

ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.